Home /News /entertainment /

வடிவேலு ரசிகர்களே ரெடியா? இது உங்களுக்காக தான்!

வடிவேலு ரசிகர்களே ரெடியா? இது உங்களுக்காக தான்!

வடிவேலு

வடிவேலு

வடிவேலுவின் பலபல கெட்டப்புகளில் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர்.

    நடிகர் வடிவேலு ரசிகர்களுக்கு இந்த வாரம் விஜய் டிவி-யில் ‘நீயா நானா’ நிகழ்ச்சி பெரும் விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.

    இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் அவர் ‘நாய் சேகர்’ படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து பிற நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும் தொடர்ந்து நடிப்பேன் என மகிழ்ச்சி பொங்க ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் வடிவேலு.

    தெனாலி ராமன், எலி என ஆங்காங்கே ஒரு சில படங்களில் வடிவேலு நடித்திருந்தாலும் கடந்த 10 வருடங்களாக அவரது சிக்னேச்சர் காமெடிகளை பார்க்க முடியவில்லை என்பதே நிஜம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவர் திரையில் தான் தோன்றவில்லை என்றாலும், மீம்ஸ் மூலமாக இணையத்தில் எப்போதும் ட்ரெண்டாகவே இருந்தார். சமகாலத்தில் நடக்கும் அரசியல் உள்ளிட்ட அத்தனை பிரச்னைகளுக்கும், 10 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த கதாபாத்திரங்கள் அச்சு அசலாய் பொருந்திப்போயின.

    ஒரு நகைச்சுவை தரும் சிரிப்பை, வடிவேலுவின் ஒரு மீம் டெம்ப்ளேட் அசால்ட்டாகக் கொடுத்துவிடும். இந்நிலையில் வரும் ஞாயிறன்று விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி வடிவேலுவின் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து என்றே சொல்லலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    வடிவேலுவின் பலபல கெட்டப்புகளில் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர். அதோடு வடிவேலு ரசிகர்கள், அவருடன் நடித்தவர்கள், காமெடியன்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு வைகைப்புயல் வடிவேலு குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், அவரிடம் தாங்கள் ரசிக்கும் விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.



    தற்போது இது குறித்த 2 ப்ரோமோக்களை விஜய் டிவி பகிர்ந்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vadivelu, Vijay tv

    அடுத்த செய்தி