அப்பாவாக போவதை புகைப்படத்துடன் அறிவித்த ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் பிரபலம்!

மனைவியுடன் சசிந்தர்

நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக 200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

 • Share this:
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகர் சசிந்தர், தான் அப்பாவாக போகும் செய்தியை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ’நாம் இருவர் நமக்கு இருவர்’. இதன் முதல் பாகத்தில் செந்தில் இரு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரக்‌ஷா ஹொல்லா மற்றும் ராஷ்மி ஜெயராஜ் ஆகிய இருவரும் நடித்தனர்.

  Vijay TV Naam Iruvar Namakku Iruvar Sasindhar wife pregnant
  மனைவியுடன் சசிந்தர்


  ஆனால் கடந்தாண்டு கொரோனா பாதிப்பால், பல சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது போல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Vijay TV Naam Iruvar Namakku Iruvar Sasindhar wife pregnant
  மனைவியுடன் சசிந்தர்


  இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜனனி அசோக் குமார், காயத்ரி யுவராஜ், ராஜுமோஹன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக 200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் முதல் சீசனில் நடித்து பிரபலமானவர் சசிந்தர்.

  இதையடுத்து இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். இதைப்பார்த்த சக சீரியல் பிரபலங்களும், ரசிகர்களும் சசிந்தர் மற்றும் அவரது மனைவிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: