Home /News /entertainment /

கிராமத்து பொண்ணுங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா - சர்ச்சையில் விஜய் டிவி சீரியல்!

கிராமத்து பொண்ணுங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா - சர்ச்சையில் விஜய் டிவி சீரியல்!

முத்தழகு சீரியல்

முத்தழகு சீரியல்

எல்லா சீரியல்களிலுமே இருக்கும் கதை களம் போல, விருப்பமில்லாத ஹீரோ மற்றும் ஹீரோயின் தான் இதன் கதையும்.

    பல சேனல்களில் ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் 10-15 சீரியலாவது ஒளிபரப்பாகி வருகிறது. எனவே, சீரியல்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. டிஆர்பிக்கு எவ்வளவு போட்டி இருக்கிறதோ, அதே அளவுக்கு எந்த சீரியலை மக்கள் அதிகமாக டிரோல் செய்கிறார்கள் என்ற போட்டியும் உள்ளது. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்கள் கடுமையான பின்னடைவையும் சந்தித்துள்ளன. சில வாரங்களுக்கு முன், பயங்கரமாக டிரோல் செய்யப்பட்ட முத்தழகு சீரியல் மறுபடியும் நெட்டிசங்களால் கேலி செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயம் செய்யும் வறுமையில் இருக்கும் ஆனால் தைரியமான கிராமத்துப் பெண், பணக்கார ஹீரோ, என்ற கதைக்களத்தை அடிப்படையாக சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கியது. முத்தழகு சீரியலின் முதல் புரோமோவிலேயே கிராபிக்ஸ் காளை மாடு வைத்து விவசாயம் செய்யும் காட்சிகள் இருந்தன. முதல் புரோமோவையே பார்வையாளர்கள் கலாய்த்துத் தள்ளினார்கள். முத்தழகு என்று பெயர் வைத்து, தைரியமான கிராமத்துப் பெண் என்று காட்டினாலே போதும் என்று நினைத்தார்களோ என்னவோ. எதிர்பார்த்த அளவுக்கு சீரியல் மக்களிடையே ரீச் ஆகவில்லை.

    எல்லா சீரியல்களிலுமே இருக்கும் கதை களம் போல, விருப்பமில்லாத ஹீரோ மற்றும் ஹீரோயின்னுக்கு திருமணம் நடைப்பெற்றது. அம்மா சொல்லுக்கு மறுபேச்சு பேசாத ஃபாரினில் படித்த ஹீரோ கிராமத்துப் பெண்ணான முத்தழகைத் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் முத்தழகு பூமிநாதனை விரும்பி திருமணம் செய்யவில்லை என்பது போல காட்சிகள் இருந்தன. பிடிக்காத திருமணம் போக போக காதலாக மாறுவது போலத்தான் இந்த சீரியலிலும் இருந்தது. இடையில், சீரியலின் பல்சை அதிகரிக்க வேண்டும் என்று ஒரு வினோதமான காட்சி இடம்பெற்றது.

    சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

    மலைக்கோயிலுக்கு ஹீரோவை ஹீரோயின் தூக்கிச் செல்லும் ப்ரோமோ அதிகமாக கேலி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக முத்தழகு சீரியலின் ப்ரமோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கிராமத்துப் பெண்ணான முத்தழகுக்கு ஒரு ஸ்மார்ட்ஃபோன் எப்படி ஆப்பரேட் செய்வது என்பது கூட தெரியவில்லை என்ற காட்சிகள் உள்ளன.

    வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்ன யாஷிகா ஆனந்த்!

    பூமிநாதனுக்கு ஒரு செல்போன் அழைப்பு வருகிறது. பூமியின் முன்னாள் காதலியாக இருப்பவர் தான் அது என்று எதிர்பார்க்கப்படும் ஒருவர் அதில் பேசுகிறார். முத்தழகுக்கு அந்த அழைப்பை எடுத்து பேசத் தெரியவில்லை என்ற காட்சியை பார்த்து தான் நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். உலகின் பெயர் தெரியாத மூலை முடுக்கில் உள்ள கிராமங்களுக்கு கூட செல்போனும் இன்டெர்நெட் கனெக்ஷனும் கிடைக்கிறது.



    இந்நிலையில் கிராமத்து பெண்ணாக காட்டப்படும் ஹீரோயினுக்கு ஸ்மார்ட் போன் என்றால் என்னவென்றே தெரியாது, ஸ்மார்ட்போன் எப்படி ஆபரேட் செய்ய வேண்டுமென்று தெரியாது என்பது போன்ற காட்சி அமைப்புகள் அமைத்திருப்பது நல்ல ‘உருட்டாக’ இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அடுத்து அடுத்ததாக அதிகமாக கலாய்க்கப்பட்டு வரும் சீரியல் முத்தழகு என்பதும் குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி