Home /News /entertainment /

பூமியை நினைத்து உருகும் அஞ்சலி: முத்தழகு சீரியலில் அதிரடியான திருப்பம்

பூமியை நினைத்து உருகும் அஞ்சலி: முத்தழகு சீரியலில் அதிரடியான திருப்பம்

முத்தழகு சீரியல்

முத்தழகு சீரியல்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய திருப்புமுனை முத்தழகு சீரியலில் இடம்பெற்றுள்ளது.

மண் மணம் மாறாத கிராமத்து கதையாக முத்தழகு சீரியல் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக தொடங்கியது. ஒரு சில சீரியல்கள் பார்வையாளர்களிடையே வரவேற்பை உடனடியாக பெற்று விடும். விறுவிறுப்பான புரோமோ மற்றும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் ஆகிய இரண்டுமே புதிய சீரியலை மக்களிடம் எவ்வளவு விரைவில் கொண்டு செல்கிறது என்பதில் முக்கியமான பங்கை வகிக்கின்றன. அதே போல ஒரு சீரியலின் ப்ரமோவோ, டீஸரோ அதிகமாக ட்ரோல் செய்யப்படுவதன் மூலம் அது பலரையும் சென்றடைந்திருக்கிறது.

முத்தழகு சீரியலின் முதல் டீசரும் பயங்கரமாக கலாய்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வெளியான எபிசோடுகள் ரசிகர்களை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இடையிடையே அவ்வபோது டிரோல் செய்யப்படும் சீரியல்களில் முத்தழகுவும் ஒன்று என்றாலும், அவ்வப்போது ஒரு சில திருப்பங்களை சீரியல் குழுவினர் ஏற்படுத்தி விடுகின்றனர்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய திருப்புமுனை முத்தழகு சீரியலில் இடம்பெறப் போவதை இந்த வாரம் வெளியான ப்ரோமோ தெரிவிக்கின்றது. முத்தழகு சீரியலில் நாயகனின் பெயர் பூமி, அவருடைய காதலி அஞ்சலி. ஆனால், அம்மாவின் விருப்பத்துக்கிணங்க முத்தழகை திருமணம் செய்து கொள்கிறார் நாயகன். திருமணமானது காதலிக்கு தெரியாது, காதலி இருப்பது மனைவிக்கு தெரியாது. இந்த முக்கோணக் குழப்பத்தை எப்படி இயக்குனர் காட்சிகளாக வெளிப்படுத்த போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.



இது வழக்கம் போல முக்கோண உறவு பிரச்சனை தானே, இதில் என்ன புதிதாக இருக்க முடியும் என்ற கேள்வியும் பலரும் கூறி வந்தனர். நாயகனுக்கு நண்பனாக KPY சரத் ஒரு முக்கிய வேடத்தில் இந்த சீரியலில் நடிக்கிறார். தற்போது வெளியான புரமோவில், அவருக்கு அஞ்சலி கால் செய்து பூமியைப் பார்க்க வேண்டும், பூமியிடம் பேச வேண்டும் என்று கெஞ்சும் காட்சிகள் உள்ளன.

also read : திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

பூமிக்கு திருமணம் ஆகிவிட்டது எனவே அவரை அஞ்சலி தொடர்பு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தும் என்று அவரை தவிர்க்க வேண்டும், பிரச்சனைகளை தடுக்க வேண்டும் என்ற நினைத்துக்கொண்டு அஞ்சலியை தவிர்க்கிறார் சரத். ஆனால் அஞ்சலியுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே பூமி மற்றும் முத்தழகு இருவரும் வரும் காட்சிகள் ப்ரோமோவில் உள்ளன.



 

சரத்திடம் இருந்து பூமி போனை வாங்கி பேசும் காட்சியும் உள்ளன. இந்த ப்ரோமோவின் படி உண்மையிலேயே அஞ்சலியும் பூமியும் பேசிக் கொண்டார்களா என்பது தெரியவில்லை. கணவனுக்கு காதலி இருப்பது தெரியவந்தால் முத்தழகு என்ன முடிவு எடுப்பார்?

also read : கே.ஜி.எஃப் ராக்கியின் ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்! 


also read : KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்

சில வாரங்களுக்கு முன் அஞ்சலி பூமியின் செல்போனுக்கு அழைத்த போது அதை ஆப்ரேட் செய்ய தெரியாமல் தடுமாறும் காட்சிகள் வெளியாகின. அதையும் ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்தனர். இந்த காட்சி வெளியாகி பல வாரங்கள் ஆன நிலையில் இதுவரை பூமியும் அவரது முன்னாள் காதலியும் சந்திக்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த முறையாவது அவர்கள் இருவரும் சந்திப்பார்களா, கதை போக்கில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.



இந்த காட்சிகள் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் பலரும் இன்னும் எத்தனை சீரியலில்தான் இதே போன்ற காட்சிகள் வைக்க போகிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதில் பூமியின் காதலி அஞ்சலியாக, சமீபத்தில் திருமணமாகி ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் வைஷாலி நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: TV Serial, Vijay tv

அடுத்த செய்தி