Home /News /entertainment /

சீரியலில் நடிக்க வந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை ஜாக் - ரசிகர்கள் வாழ்த்து!

சீரியலில் நடிக்க வந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை ஜாக் - ரசிகர்கள் வாழ்த்து!

ஜாக் அண்ட் ரோஷினி

ஜாக் அண்ட் ரோஷினி

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பின்னணி பாடகி ரோஷினி மற்றும் அவரது கணவர் ஜாக் இருவரும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்கள்.

    மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரையில் போட்டியாளராக களமிறங்கிய பாடகி ரோஷினியின் கணவர் ஜாக், விஜய் டிவி-யின் பிரபல சீரியல் மூலம் நடிப்பிற்கும் அறிமுகமாகியிருக்கிறார்.

    விஜய் டிவி-யில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை. இதன் மூன்றாவது சீசனில் 12 ஜோடிகள் களம் இறங்கினார்கள். பல போட்டிகள், சவால்கள் நிறைந்த இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. வாரவாரம் நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் வெளியேற, கடைசியில் டாப் 5 ஜோடியில் முதல் ஜோடியாக ஜாக் – ரோஷினி ஜோடி பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின்னர் சரத் கிருத்திகா ஜோடி டைட்டிலை வென்றது.

    இருப்பினும் இதன் போட்டியாளர்கள் அனைவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக பின்னணி பாடகி ரோஷினி மற்றும் அவரது கணவர் ஜாக் இருவரும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்கள். பின்னணி பாடகியாக நிறைய பாடல்களை பாடிய ரோஷினி, விஜய் டிவியில் ’சூப்பர் சிங்கர்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். இதையடுத்து ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் கணவருடன் களம் இறங்கினார்.

    ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பிரச்னைக்கு தீர்வு காண்பார்களா?



     




    View this post on Instagram





     

    A post shared by Jack (@jackandroshini_official)






    இந்நிலையில் அமெரிக்காவில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த ஜாக் தற்போது விஜய் டிவி சீரியலில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். அதாவது நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் சிவகாந்த் என்ற கதாபாத்திரத்தில் இனி நடிக்கப்போவது இவர் தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி