Morattu Single: விஜய் டிவி ’மொரட்டு சிங்கிள்’ மாபெரும் இறுதிப்போட்டி!

கேப்ரியல்லா

இதில் யாஷிகா ஆனந்த், அபிராமி, கேப்ரியெல்லா, ஸ்ரீநிதி மற்றும் ஜாக்குலின் நடுவர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிப்போட்டி இந்த வாரம் ஒளிபரப்பாகவிருக்கிறது.

    விஜய் டிவி-யில் நகைச்சுவை கலந்த இளைஞர்களுக்கான ரியாலிட்டி ஷோ-வான முரட்டு சிங்கிள்ஸ் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி பத்து போட்டியாளர்களுடன் தொடங்கியது, அவர்களில் ஐந்து போட்டியாளர்கள் இப்போது இறுதிப் போட்டியில் நுழைகிறார்கள்.

    குட்டி கோபி, வி.ஜே.விஜய், சாம் விஷால், சில்மிசம் சிவா மற்றும் இனியன் ஆகிய இந்த முதல் ஐந்து போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்குள் நுழைகிறார்கள். இவர்கள் இளம் பெண்களின் மனங்களை கவர்ந்து அவர்களின் அன்பை பெறவேண்டும். அதோடு IQ, EQ மற்றும் LQ சவால்களையும் சந்திக்க வேண்டும்.

    இதில் யாஷிகா ஆனந்த், அபிராமி, கேப்ரியெல்லா, ஸ்ரீநிதி மற்றும் ஜாக்குலின் நடுவர்களாக இடம் பெற்றிருக்க, பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்கள். இந்நிலையில் முரட்டு சிங்கிள்ஸ் பிரமாண்டமான இறுதிப் போட்டி, 09 மே 2021, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: