Home /News /entertainment /

அடுத்தடுத்து கார் வாங்க இதுதான் காரணம் போல.. விஜய் டிவி மணிமேகலை ஒரு நாள் சம்பளம் மட்டுமே இவ்வளவு!

அடுத்தடுத்து கார் வாங்க இதுதான் காரணம் போல.. விஜய் டிவி மணிமேகலை ஒரு நாள் சம்பளம் மட்டுமே இவ்வளவு!

விஜய் டிவி மணிமேகலை

விஜய் டிவி மணிமேகலை

ஒரு எபிசோடுக்கு பல ஆயிரம் முதல் லட்சத்திற்கும் அதிகமாக கூட சம்பளமாக வருகிறார் என்ற செய்தி அவ்வப்போது வெளியாகும்.

    சின்னத்திரையில் நடிகர்-நடிகைகள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, தங்களுக்கென்ற தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்குகின்றனர். சமீபத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த, தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை. இவருக்கு சமூக வலைதளங்களில் லட்சகணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.

    காதல் திருமணம் செய்த மணிமேகலை தன் கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனலும் உள்ளது. இவர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது.

    விஜய் தொலைக்காட்சியின் சிறந்த தொகுப்பாளர்களில் ஒருவராக மாறியுள்ள மணிமேகலை மூன்று மாதங்களுக்கு முன்புதான் மணிமேகலை மற்றும் ஹுசைன் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கினார்கள். கார் வாங்கியதை மகிழ்ச்சியுடன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர் இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இந்த ஜோடி சில நாட்களுக்கு முன் மேலும் ஒரு புதிய காரை வாங்கியுள்ளது.

    இதை பற்றிய விவரத்தை சில நாட்களுக்கு முன் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரீலாக ஷேர் செய்துள்ளார். காதல் திருமணம் செய்து ஆரம்ப நாட்களில் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் பொருளாதார ரீதியாகவும் சில சிக்கல்களை எதிர்கொண்ட மணிமேகலை மற்றும் ஹுசைன் தற்போது மகிழ்ச்சியாக வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.

    சன் மியூசிக் தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரைத் தொடங்கிய மணிமேகலை, ஆரம்பமான நாட்கள் முதல் தன்னுடைய கலகலப்பான அணுகுமுறையால் நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யப்படுத்தினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் இணைந்தார்.

    மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை முதல் சீசனில் போட்டியாளர்களாக கலந்துக்கொண்ட ஹுசைன் மற்றும் மணிமேகலை, பிரபலமாகத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 மூலம் கோமாளியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார். பலருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அது போலவே மணிமேகலையும் தன்னுடைய கேரியரில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Mani Megalai (@iammanimegalai)






    பொதுவாகவே, நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு, நடிகர் நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கும். விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை தொகுப்பாளர்களுக்கு ஸ்பெஷல் இடம் உள்ளது. தொகுப்பாளர்கள் ஒரு எபிசோடுக்கு பல ஆயிரம் முதல் லட்சத்திற்கும் அதிகமாக கூட சம்பளமாக வாங்குகிறார்கள் என்ற செய்தி அவ்வப்போது வெளியாகும்.

    தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் மணிமேகலை எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, விஜய் டிவியில் தொகுப்பாளர் மணிமேகலை ஒரு எபிசோடுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி