சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சேனல்களின் TRP ரேட்டிங் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்து வருகின்றன ரியலிட்டி ஷோக்கள். விதிவிதமான கான்செப்டுடன் பல வித்தியாசமானான் அதே சமயம் விறுவிறுப்பான ரியாலிட்டி ஷோக்கள் பல முன்னணி பிரபல தமிழ் சேனல்களை ஆக்கிரமித்து உள்ளன. அவை ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெறவும் தவறுவதில்லை. பிரமாண்ட மற்றும் நகைச்சுவை கலந்த ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது ஸ்டார் விஜய் டிவி தான்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களும் சின்னத்திரை ரசிகர்களை கவராமல் சென்றதில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தையும், ஆதரவையும் பெற்றுள்ளன விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் ரியாலிட்டி ஷோக்கள். விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோக்கள் மாபெரும் ஹிட் அடிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது அந்த ஷோக்களை தொகுத்து வழங்கும் ஆங்கர்கள் தான். டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி, நீயா நானா கோபிநாத், பிரியங்கா தேஷ்பாண்டே, அர்ச்சனா, ரக்ஷன், ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.
இவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒரு ஆங்கராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் மற்றும் தொகுப்பாளரான மாகாபா ஆனந்த். விஜய் டிவி-யின் ஆஸ்தான ஆங்கர்கள் பட்டியலில் மாகாபா ஆனந்த்திற்கு ஒரு தனி இடம் உண்டு. ரேடியோ ஜாக்கியாக தனது தொழில் வாழ்க்கையை துவங்கிய மாகாபா ஆனந்த் ரேடியோ மிர்ச்சியில் 6 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர் அறிமுக இணை தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுடன் இணைந்து "சினிமா காரம் காபி" நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் வீடியோ ஜாக்கியாக அறிமுகமானார்.
பின் அது இது எது ஷோவை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த மாகாபா ஆனந்த், தொடர்ந்து விஜய் டிவியிலேயே பல ஆண்டுகளாக ஆங்கராக பணியாற்றி வருகிறார். வெள்ளித்திரையில் நடிகராக கடந்த 2014-ல் வெளிவந்த வானவராயன் வல்லவராயன் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து நவரச திலகம், கடலை, அட்டி, மீசையை முறுக்கு, பஞ்சுமிட்டாய், மாணிக் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் டி20, கிங்ஸ் ஆஃப் டான்ஸ், மிஸஸ் சின்னத்திரை, மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் (சீசன் 1,2 மற்றும் 3), தி வால், முரட்டு சிங்கிள்ஸ், ராமர் வீடு உள்ளிட்டவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார் மாகாபா ஆனந்த். பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸில் பங்கேற்றுள்ள நிலையில் அவர் தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக்கையும் தற்போது மாகாபா ஆனந்தே தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே விஜய் டிவி-யில் பிரபல ஆங்கராக இருந்து வரும் மாகாபா ஆனந்த், தொகுப்பாளராக 1 எபிசோடிற்கு வாங்கி வரும் சம்பளம் ரூ.1 லட்சம் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதனை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் இவ்வளவு சம்பளம் வாங்க மாகாபா தகுதியானவர் தான் என்று பாராட்டி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv