விஜய் டிவி-யில் சிறகடிக்க ஆசை எனும் புதிய சீரியல் ஒளிபரப்பாகவிருக்கிறது.
தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன. அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.
இந்நிலையில் சீரியல்களுக்கு பிரபலமான விஜய் டிவி ஜனவரி 23-ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு சிறகடிக்க ஆசை எனும் சீரியலை ஒளிபரப்ப தயாராகி வருகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ளும் மீனா மற்றும் முத்துக்குமாரை மையப்படுத்தி சிறகடிக்க ஆசை சீரியலின் கதை நகர்கிறது. கடந்த கால கதையால் காதல், உறவுகளை வெறுக்கும் முத்துக்குமார், மனைவி மீனாவையும் தவிர்க்கிறார். ஆனால், முத்துவின் அப்பா மற்றும் பாட்டியின் மீதான அன்பும் பாசமும் மாறாமல் உள்ளது. முத்துவிடம் மீனா தனது வாழ்க்கையில் காதலை காண்பாரா என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு விமான நிலைய அதிகாரி விளக்கம்
சிறகடிக்க ஆசையில் மீனாவாக கோமதி பிரியா, முத்துவாக வெற்றி வசந்த், அண்ணாமலையாக ஆர்.சௌந்தரராஜன், விஜயாவாக அனிலா, சந்திராவாக தமிழ்செல்வி, ராம்குமாராக ஸ்ரீதேவா, ரவிக்குமாராக யோகேஷ் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv