ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அப்பாவை இழந்த 4 பெண் பிள்ளைகள்... கண்களை குளமாக்கும் விஜய் டிவி-யின் மகாநதி

அப்பாவை இழந்த 4 பெண் பிள்ளைகள்... கண்களை குளமாக்கும் விஜய் டிவி-யின் மகாநதி

மகாநதி

மகாநதி

இந்த சீரியலில் நடிகர் சரவணன், சாரதாவாக சுஜாதா, காவேரியாக லக்ஷ்மி பிரியா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு மகாநதி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகவிருக்கிறது.

தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி-யில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, மெளனராகம் 2, ஈரமான ரோஜாவே 2, தமிழும் சரஸ்வதியும் என பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது மகாநதி என்ற புதிய சீரியலை ஒளிபரப்பவிருக்கிறது விஜய் டிவி. தந்தையின் மரணத்தால் சிதைந்துபோகும் 4 மகள்கள் அடங்கிய குடும்பத்தைப் பற்றிய மனதைத் தொடும் கதையாக மகாநதி உருவாகியிருக்கிறது. இந்த சீரியலில் நடிகர் சரவணன், சாரதாவாக சுஜாதா, காவேரியாக லக்ஷ்மி பிரியா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதிய கதை களத்தில் விஜய் டிவி-யின் சிறகடிக்க ஆசை சீரியல்!

இதனை வரும் ஜனவரி 23-ம் தேதி முதல் இரவு 10 மணிக்கு விஜய் டிவி-யில் பார்த்து மகிழுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv