Home /News /entertainment /

விஜய் டிவி ஷோவில் கதறி அழுத வேல்முருகன், ஆர்த்தி கணேஷ்கர்!

விஜய் டிவி ஷோவில் கதறி அழுத வேல்முருகன், ஆர்த்தி கணேஷ்கர்!

பிக் பாஸ் தமிழ் 5

பிக் பாஸ் தமிழ் 5

’எங்க வீட்டு பிக் பாஸ்’’ என்னும் கேம் ஷோ மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய எபிசோட் போட்டியாளர்களை ஒன்று திரட்டியுள்ளது விஜய் டிவி...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஃபைனலுக்கு யாரெல்லாம் செல்வார்கள், யார் டைட்டில் வின்னர் என்று கெஸ் பண்ண முடியாத அளவுக்கு இந்த சீசன் சற்று மந்தமாக நகர்கிறது.


தாமரையின் சண்டை சீக்வன்ஸ் மட்டும் இல்லையென்றால் பிக் பாஸ் 5 படுதோல்வியை சந்தித்திருக்கும். இந்த சீசனில் பரிட்சையமான முகங்கள் ரொம்ப குறைவு.


பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ராஜு தவிர மற்ற அனைவருமே பிரபலம் இல்லாத முகங்கள். இதற்கிடையில் கமலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இரண்டு வார இறுதி எபிசோடை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அவர் எப்படி போட்டியாளர்களின் பஞ்சாயத்தை நடத்தப் போகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நிறைய பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தார்கள். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழைய ரேட்டிங்கில் வந்துவிட்டது.


தற்போது ’’எங்க வீட்டு பிக் பாஸ்’’ என்னும் கேம் ஷோ மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய எபிசோட் போட்டியாளர்களை ஒன்று திரட்டியுள்ளது விஜய் டிவி.




snehan
சிநேகன் - கன்னிகா

பிக் பாஸ் பிரபலங்கள் தம்பதிகளாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். கணவன் - மனைவி புரிதல் அளவை சோதிக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கும்.


சிநேகன் - கன்னிகா,  சுஜா வருணி - சிவகுமார் , அனிதா சம்பத் - பிரபாகரன், ரம்யா என்.எஸ்.கே - சத்யா, சென்ராயன் - கயல்விழி, வேல் முருகன் - கலா, ஆர்த்தி - கணேஷ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். குக் வித் கோமாளி தீபா, வினோத் உள்ளிட்டோரும் கெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கின்றனர். இந்நிகழ்ச்சியை மணிமேகலை, ஈரோடு மகேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.



மனைவிக்காக கணவன் சமைப்பது, நடனம் ஆடுவது, பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வது என ஜோடிகளின் கலகலப்பான நிகழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிகழ்ச்சியின் இரண்டு புரோமோக்கள் வெளியாகியுள்ளது. ஒரு புரோமோவில் வேல் முருகன் தன் மனைவி குறித்து பேசி அழுகிறார். ``ஒவ்வொரு மனைவிக்கும் தன் புருஷன் ஸ்டைலா இருக்கணும், கெத்தா இருக்கணும்னு ஆசை இருக்கும். என் மனைவிக்கும் அப்படி ஆசை இருந்திருக்கும். ஆனா எனக்கு அப்படி ஸ்டைலாக இருக்க தெரியாது. என்னை அப்படியே ஏத்துக்கிட்டா’’ என்று சொல்லி கதறி அழுகிறார்.


இதையும் படிங்க..  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள்


மற்றொரு புரோமோவில் ஆர்த்தி தன் கணவர் கணேஷ்கர் பற்றி, "அவர் என் கிட்ட நிறைய பொய் சொல்லி காசு வாங்குவார். நாங்க எப்பவும் நிறைய அடிச்சிப்போம். ஆனா ரொம்ப பாசமா இருப்போம். என் அம்மா என்னை எப்படி பார்த்துப்பாங்களோ அப்படி பார்த்துக்குறாரு. நானும் அவரை என் குழந்தை மாதிரி தான் பார்த்துக்குறேன். எனக்கு அவர் தான் குழந்தை. என் குட்டா அவர்’’ என்று சொல்லி அழுகிறார். நெகிழ்ந்து போன கணேஷ்கரும் கண் கலங்குகிறார். கணேஷ்கரும் ஆர்த்தியும் நீண்ட நாட்களுக்கு பிறகு கலந்து கொள்ளும் டிவி ஷோ இது, இருவரும் தற்போது தங்கள் யூடியூப் சேனலில் பிஸியாக உள்ளனர்.




உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Bigg boss 2, Bigg Boss 2 Tamil, Bigg boss Harathi, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

அடுத்த செய்தி