ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’மனைவியின் அன்பான பரிசு...’ கலக்கப்போவது யாரு சரத் வீட்டில் புதுவரவு!

’மனைவியின் அன்பான பரிசு...’ கலக்கப்போவது யாரு சரத் வீட்டில் புதுவரவு!

சரத் - கிருத்திகா

சரத் - கிருத்திகா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பே, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அவர் நடித்திருந்தது, பலரும் அறியாத ஒன்று.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ’கலக்கப்போவது யாரு’ சரத் வீட்டுக்கு புது வரவு வந்ததையொட்டி ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத். பார்ப்பதற்கு நடிகர் மொட்டை ராஜேந்திரன் தோற்றத்தை ஒத்திருந்த சரத், தீனாவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளை கலக்கப்போவது யாரு மேடையில் நிகழ்த்தினார். குறிப்பாக மொட்டை ராஜேந்திரன் வசனத்தை பேசி அவரைப்போன்றே நடித்திருந்த சரத்தின் காமெடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பே, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அவர் நடித்திருந்தது, பலரும் அறியாத ஒன்று. டிவி-யில் கிடைத்த பிரபலத்தைத் தொடர்ந்து, சிபிராஜ் நடித்திருந்த சத்யா படத்திலும் சரத் நடித்திருந்தார். அதோடு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக இடம்பெற்றிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, கிருத்திகா என்றவரை காதலித்து கரம்பிடித்தார் சரத். தற்போது இவர்கள் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.
   
  View this post on Instagram

   

  A post shared by Sarath_offl (@sarath_kpy)  இந்நிலையில் சரத் வீட்டுக்கு புதுவரவு ஒன்று வந்திருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? அதாவது அவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சரத், அது தனது மனைவி கிருத்திகாவின் அன்பான பரிசு என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், சரத் - கிருத்திகா தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Vijay tv