’பாவம் கணேசன்’ சீரியல் நடிகர் நவீன் தற்போது தனது மகனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழின் சிறந்த மிமிக்ரி கலைஞர்களில் ஒருவராக நவீன் மாறியுள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 9-ல் நடனக் கலைஞராகவும் பிரகாசித்தார்.
Vijay TV DD: மாலத்தீவில் விஜய் டிவி டிடி – கவனம் பெறும் நீச்சல் குள படங்கள்!
நவீன் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'பாவம் கணேசன்' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. அதோடு ஒரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
2018 ஆம் ஆண்டில் கிருஷ்ணகுமாரி என்ற மலேசியப் பெண்ணை மணந்தார் நவீன். இந்த ஜோடி பல டப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக் வீடியோக்களை இணைந்து செய்து இணையத்தில் பிரபலமானது. அதோடு தங்கள் பிரபல நண்பர்களுடனும் இணைந்து டிக் டாக் செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது முதல் முறையாக, நவீன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். தனது மகன் சாய் கிருஷ்ணாவின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்