ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss Tamil 6: பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி அறிவிப்பு!

Bigg Boss Tamil 6: பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி அறிவிப்பு!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமல்லாமல், எந்தப் பின்னணியும் இல்லாத சாதாரண மக்களும் கலந்துக் கொள்கிறார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபலமான 'பிக் பாஸ் தமிழ்' ரியாலிட்டி ஷோவின் 6-வது சீசன், அக்டோபர் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் தொடங்குகிறது. 'விக்ரம்' ட்ரெய்லர் ஸ்டைலில் கமல்ஹாசன் இடம்பெறும் புதிய ப்ரோமோ வீடியோவுடம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ்' நிகழ்ச்சியின் முந்தைய ஐந்து சீசன்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. சர்வதேச மற்றும் இந்தி பதிப்புகளைப் போலவே தமிழ் பதிப்பும் TRP வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஐபோன் கொடுத்த ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாய் கொடுத்த கூல் சுரேஷ்

  'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமல்லாமல், எந்தப் பின்னணியும் இல்லாத சாதாரண மக்களும் கலந்துக் கொள்கிறார்கள். திவ்யதர்ஷினி, மோனிக்கா ரிச்சர்ட், ராஜலட்சுமி செந்தில், ஷில்பா மஞ்சுநாத், ரோஷ்னி ஹரிபிரியன், தர்ஷா குப்தா, அஸ்வின் குமார், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி மற்றும் மனிஷா யாதவ் ஆகியோர் இப்போது வரை போட்டியாளர்கள் பட்டியலில் உள்ளனர். உண்மையில் யார் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள் என்பது அக்டோபர் 9-ம் தேதி தான் தெரிய வரும்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil