Home /News /entertainment /

இதுக்காக தான் சீரியல்ல இருந்து விலகுனாங்களா? விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட கிளாமர் போஸ்டர்!

இதுக்காக தான் சீரியல்ல இருந்து விலகுனாங்களா? விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட கிளாமர் போஸ்டர்!

பிரியங்கா குமார்

பிரியங்கா குமார்

மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ முடித்துள்ள இவர் மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா போட்டியில் பங்கேற்று வெற்றியாளரானதன் மூலம் 2016 முதல் பிரபலமானார்.

    தமிழ் டிவி ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாகவும், முன்னணியிலும் இருந்து வரும் சேனல்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது ஸ்டார் விஜய் டிவி. வார இறுதி நாட்களில் பல ரியாலிட்டி ஷோக்களை ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஒளிபரப்பி வரும் விஜய் டிவி, அவர் நாட்களில் காலை முதல் இரவு வரை எண்ணற்ற சீரியல்களை ஒளிபரப்பி அவர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பல ஹிட் சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்தில் டெலிகாஸ்ட் செய்து வரும் விஜய் டிவி-யில், கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் சார்ந்த கதைக்களத்தில் சூப்பர் ஹிட் சீரியலாக யூத்ஃபுல்னஸுடன் ஓடி கொண்டிருக்கிறது காற்றுக்கென்ன வேலி சீரியல்.

    இந்த சீரியலில் தந்தையை எதிர்த்து ஆசிரியையின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வெண்ணிலா என்ற பெண் நாட்கள் செல்ல செல்ல அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் சூர்யாவை காதலிக்கிறார். இவர்களது காதல் இந்த காதலால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை பின்னணியாக கொண்டு இந்த ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ரசிகர்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த சீரியலில் ஹீரோவோக முன்பு நடிகர் தர்ஷன் நடித்து வந்த நிலையில் தற்போது சூர்யா கேரக்டரில் சுவாமிநாதன் அனந்தராமன் என்பவர் நடித்து வருகிறார். பல கேரக்டர் மாற்றங்களுக்கு மத்தியிலும் தற்போது வரை இந்த சீரியல் ரசிகர்களை கவர மற்றொரு காரணமா நாயகியாக நடிக்கும் நடிகை பிரியங்கா குமார் தான். காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவாக நடித்து ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளார் நடிகை பிரியங்கா குமார். தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவின் மைசூரில் பிறந்த நடிகை பிரியங்கா குமாருக்கு பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக 15 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

    Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!

    மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ முடித்துள்ள இவர் மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா போட்டியில் பங்கேற்று வெற்றியாளரானதன் மூலம் 2016 முதல் பிரபலமானார். கர்நாடகத்தின் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த இவர் சன் டிவி-யின் சாக்லெட் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தொற்று பரவல் காரணமாக சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட, பின்னர் விஜய் டிவி-யின் காற்றுக்கென்ன வேலி மூலம் மீண்டும் வந்து தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

    Valentine’s Day 2022: காதலில் திளைத்து பின் பிரிந்து போன காதல் ஜோடிகள்!




    Valentine's Day 2022: காதலர்கள் மிஸ் பண்ணக்கூடாத தமிழ் ரொமாண்டிக் திரைப்படங்கள்!

    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா குமார் இன்ஸ்டாவில் தனது முதல் வெள்ளித்திரை பயணம் பற்றிய தகவலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றுடன் ஷேர் செய்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார். ADDHURILOVER என்ற கன்னட திரைப்படத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகர் விராட் உடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் நெருக்கமாக பிரியங்கா குமார் அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. நடிகையின் வெள்ளித்திரை பயணம் வெற்றியடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி