ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ‘காற்றின் மொழி’ சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் தனது பிகினி படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் உலகத்தை சுருக்கியுள்ளது என்றே கூறலாம். பிரபலங்களையும் அவர்களது ரசிகர்களையும் மிக நெருக்கமாக அழைத்து வந்ததில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த நொடியும் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள ஏதுவாக அமைந்திருக்கிறது. இதற்கிடையே பிரபல தொலைக்காட்சி நடிகை பிரியங்கா ஜெயின், ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், பிரியங்காவின் பீச் படத்தை பதிவிடக்கோரி கோரிக்கை வைத்தார், இதையடுத்து அவர் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டார்.

பிரியங்கா ஜெயின்
விஜய் டிவி-யில் ஒளிபரபாகி வரும் ‘காற்றின் மொழி’ சீரியலில் கண்மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றிருக்கிறார் பிரியங்கா ஜெயின். அடிப்படையில் மார்டன் பெண்ணான அவர், அந்த சீரியலில் பெரும்பாலும், தாவணி மற்றும் சேலை என பாரம்பரிய உடைகளையே அணிந்துள்ளார். எனவே பிரியங்கா தனது பிகினி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவற்றிற்கு தங்கள் விருப்பங்களை தெரிவித்தனர். காற்றின் மொழி சீரியலில் ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்துப் புகழ் பெற்ற சஞ்சீவ் ஹீரோவாக நடிக்கிறார்.

பிரியங்கா ஜெயின்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா, வளர்ந்தது, படித்தது எல்லாமே பெங்களூரில். ஸ்ரீ என்.கே.எஸ் ஆங்கில பள்ளியில் பள்ளி படிப்பையும், ஜெயின் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். அழகான, திறமையான, பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார். பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதற்கடுத்து 2015 ஆம் ஆண்டில், நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட த்ரில்லர் திரைப்படமான ’ரங்கிதரங்காவில்’ நடித்தார். இதனை அனுப் பண்டாரி இயக்கியிருந்தார்.
கிராமத்து தோற்றத்தில் இருக்கும் பிரியங்கா, நிஜத்தில் படு மாடர்ன். இவரது சமூக வலைதள பக்கத்தில் இதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஊர் சுற்றுவதும், மராத்திய உணவுகளை உண்பதும், பிரியங்காவுக்குப் பிடித்த விஷயங்களாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்