Home /News /entertainment /

தீவிரமான ஒர்க் அவுட்... உடம்பை குறைத்து ஸ்லிம்மான விஜய் டிவி ஜாக்குலின்!

தீவிரமான ஒர்க் அவுட்... உடம்பை குறைத்து ஸ்லிம்மான விஜய் டிவி ஜாக்குலின்!

விஜய் டிவி ஜாக்குலின்

விஜய் டிவி ஜாக்குலின்

இளைஞர்களை கவர்ந்த ஜாக்குலின், சீரியல் மூலம் குடும்பத்தலைவிகளின் மனதிலும் இடம் பிடித்தார்.

    விஜய் டிவி ஆங்கர் ஜாக்குலினின் ஒர்க் அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. 

    சின்னத்திரையில் தொகுப்பாளர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் மற்றும் நடிகைகளைப் போலவே, தொகுப்பாளர்களுக்கும் சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். அதில் பப்ளியான தோற்றம், ஜாலியான குணம், டைமிங் சென்ஸ் என்று பலரும் விரும்பும் தொகுப்பாளினி தான் விஜய் டிவி ஜாக்குலின். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    கொஞ்சம் கீச்சுக் குரலுடன், கொழு கொழுவென்று கலக்கப் போவது யாரு சீசன் 5-ல் அறிமுகம் ஆனவர் ஜாக்குலின். இவரின் குரலும், பாடி லாங்குவேஜும் பெரிதாக வரவேற்பை பெற்றது. சக தொகுப்பாளரான ரக்ஷனுடன் ஜாக்குலின் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பெரிய வரவேற்பை பெற்றன. கல்லூரி படிக்கும் போது பகுதி நேர விஜே-வான ஜாக்குலின், பின்னர் நடிகையாகவும் மாறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது... கண் கலங்கிய இரவின் நிழல் பிரிகிடா

    கோலமாவு கோகிலா திரைப்படத்தில், நடிகை நயன்தாராவின் தங்கையாக அறிமுகமான இவர், பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்‌ஷனின் தோழியாக தலை காட்டினார். பின்னர் விஜய் டிவியின் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் சுட்டிப்பெண்ணாக, சீரியலின் நாயகியாக நடித்தார். அது வரை இளைஞர்களை கவர்ந்த ஜாக்குலின், சீரியல் மூலம் குடும்பத்தலைவிகளின் மனதிலும் இடம் பிடித்தார். அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமான நிறைவடைந்தது.

    தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை செளந்தர்யா பிறந்த தினம்




    இந்நிலையில் தற்போது ஜாக்குலின் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ இன்ஸ்டகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது. கொழுக் மொழுக்கென்று இருக்கும் ஜாக்குலின், தனது உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி