சின்னத்திரையில் தொகுப்பாளர்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. நடிகர் மற்றும் நடிகைகளைப் போலவே, தொகுப்பாளர்களுக்கும் சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். பப்ளியான தோற்றம், ஜாலியான குணம், டைமிங் சென்ஸ் என்று பலரும் விரும்பும் தொகுப்பாளினி தான் விஜய் டிவியின் ஜாக்குலின். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வரும் ஜாக்குலினின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்களும், பிரபலங்களும் விடுமுறைக்காக வெளிநாடு செல்வது வழக்கம். பெரும்பாலானவர்கள், மொரீஷியஸ் அல்லது தாய்லாந்து ஆகிய இரண்டு இடங்களையே தேர்வு செய்வார்கள். பேங்காக், தாய்லாந்து என்று ஆண்கள் பார்ட்டிக்கான இடம், ஆண்கள் மட்டும் தான் பெரும்பாலும் செல்வார்கள் என்பது மாறியுள்ளது. அதுவும், செல்லப்பிராணி போல, சாதுவான புலிகளுக்கு பெயர் பெற்ற இடம் தாய்லாந்து. அதற்காகவே, பிரபலங்கள்அங்கே தங்கள் விடுமுறையை கழிக்கிறார்கள். சமீபத்தில், விடுமுறைக்கு தாய்லாந்து சென்ற பிரபலம், விஜய் டிவியின் பப்ளி தொகுப்பாளினி ஜாக்லீன். அங்கு சென்றவர், அவ்வாறு புலியுடன் செல்லமாய் போஸ் கொடுத்து பார்ட்டி செய்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கொஞ்சம் கீச்சுக் குரலுடன், கொழு கொழுவென்று கலக்கப் போவது யாரு சீசன் 5ல் அறிமுகம் ஆனவர் ஜாக்குலின். நகைச்சுவை உலகில் இப்போது வரை கோலோச்சி கொண்டிருப்பது ஆண்கள் தான். அரிதாக தான் பெண்களை காண முடிகிறது. இவரின் குரலும், பாடி லாங்குவேஜும் பெரிதாக வரவேற்பை பெற்றது. சக தொகுப்பாளரான ரக்ஷனுடன் ஜாக்குலின் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது. ஏர்ஹோஸ்டஸ் ஆக பணியாற்றிய ஜாக்குலின் விஜேவாகி, பின்னர் நடிகையாகவும் மாறினார்.
Meena: நடிகை மீனா கர்ப்பம்? வைரலாகும் வீடியோ!
கோலமாவு கோகிலா திரைப்படத்தில், நடிகை நயன்தாராவின் தங்கையாக திரைப்படத்தில் அறிமுகமானார் ஜாக்குலின். விஜய் டிவியின் சீரியல்களில் தலை காட்டிய ஜாக்குலின், தேன்மொழி பிஏ என்ற சீரியலில் சுட்டிப்பெண்ணாக, சீரியலின் நாயகியாக அறிமுகம் ஆனார். அது வரை இளைஞர்களை பெரிதாக கவர்ந்த ஜாக்குலின், குடும்பத்தலைவிகளின், சீரியல் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். சீரியல் வெற்றிகரமான நிறைவடைந்தது. அடுத்த சீரியல் அல்லது கமிட்மென்ட் பற்றி எதுவும் முடிவெடுக்காத நிலையில், ஜாக்குலின் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். ஜாக்குலினுக்கு கிட்டத்தட்ட 9 லட்சத்துக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர். புகைப்படங்கள், ரீல்ஸ், என்று அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். மஞ்சள் நிற ஆடையில், துளியும் மேக்கப் இன்றி, தாய்லாந்தில் புலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பாகுபலி 2 சாதனை உடைப்பு - வசூலை அள்ளும் கேஜிஎப் சேப்டர் 2!
அதில் அது நிஜமான புலியா அல்லது ஸ்பான்ஜ் வைத்து அடைக்கப்பட்ட புலி பொம்மையா என்றே தெரியாத அளவுக்கு அமைதியாக படுத்துக் கொண்டிருக்கிறது புலி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.