• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கார் டிரைவரின் மகள் நான்.. சந்தோஷமான தருணத்தில் அப்பாவை நினைவுகூர்ந்த விஜய் டிவி ஜாக்குலின்!

கார் டிரைவரின் மகள் நான்.. சந்தோஷமான தருணத்தில் அப்பாவை நினைவுகூர்ந்த விஜய் டிவி ஜாக்குலின்!

விஜய் டிவி ஜாக்குலின்

விஜய் டிவி ஜாக்குலின்

நடிகை ஜாக்குலின் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

  • Share this:
    விஜய் டிவியில் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் இருக்கும் நடிகை ஜாக்குலின் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், புதிய வாகனம் வாங்கிய மகிழ்ச்சியான தருணத்தை போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

    இவர் முதன் முதலில் கனா காணும் காலங்கள் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, அதன் மூலம் பிரபலமானர். ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குறிப்பாக 5வது சீசனில் தான் இவர் தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கினார். அடுத்தடுத்த சீசன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

    இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதையடுத்து, அவர் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றியுள்ளார். பின்னர், மீண்டும் விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக தோன்றினார். மேலும் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது அவர் தேன்மொழி BABL சீரியலின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். ஆனால் இடையில் கொரோனா, சில பிரபலங்களின் மாற்றம், நேரம் மாற்றம் போன்ற பல பிரச்சனைகளால் சீரியல் அந்த அளவுக்கு ரசிகர்களிடையே ரீச் ஆகவில்லை. இருப்பினும், இந்த நாடகம் இன்னும் ஒளிபரப்பப்பட்டு தான் வருகிறது. இதனிடையே, நடிகை ஜாக்குலின் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்த தருணத்தை போட்டோவாக வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Jacquline Lydia இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@me_jackline)






    அந்த புகைப்படத்தில் அவர், தனது அம்மாவுடன் நின்று வாகனத்தின் சாவியை வாங்கிக்கொள்கிறார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட நடிகை ஜாக்குலின் அந்த பதிவில், " கார் என்பது ஒரு பொருள் அல்ல. இது நம் ஒவ்வொருவரின் உணர்ச்சியை பார்க்கும் இரண்டாவது வீடு ... என் அப்பா ஒரு கார் டிரைவர் என்பதால், என் குழந்தை பருவத்திலிருந்தே கார்களை அதிகம் விரும்பினேன்... இது என் குடும்பத்தின் புதிய உறுப்பினர் #kiaseltos. என்னை நேசித்த அனைவருக்கும் எனக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் எனது நன்றிகள். லவ் யூ ஆல்." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நடிகை ஜாக்குலின்-க்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: