Home /News /entertainment /

அறந்தாங்கி நிஷாவின் மாடர்ன் கிச்சன் டூர் ! வைரலாகும் வீடியோ..

அறந்தாங்கி நிஷாவின் மாடர்ன் கிச்சன் டூர் ! வைரலாகும் வீடியோ..

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

Aranthaangi Nisha : அறந்தாங்கி நிஷா யூடியூப் சேனலின் பெயர் 'கருப்பு ரோஜா' என்பதாகும்.

விஜய் டிவியில் உள்ள ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகையர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர்கள் எல்லோரும் நிகழ்ச்சிகளில் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டி தனக்கான முக்கிய இடத்தை பிடித்து விடுகின்றனர். அதே போன்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பம்சம் உண்டு. இவர்களில் பலர் ஆரம்ப காலத்தில் சாதாரண நிலையில் இருந்தவர்கள் தான். அதன் பிறகு படிப்படியாக தனது திறமையின் மூலம் மேலே வந்துவிட்டனர்.

அந்த வகையில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, பிறகு பல நிகழ்ச்சிகளில் முன்னணி பிரபலமாக வலம் வருகிறார் கே.பி.ஒய் அறந்தாங்கி நிஷா. தனது தொலைக்காட்சி பயணத்தை இவர் சாதாரணமாக தான் தொடங்கினார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி, தற்போது சினிமா வாய்ப்புகள் பெறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். நடுத்தர குடும்பத்து பெண்களும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை நிஷாவின் வெற்றி மூலம் இன்று பலரால் உணர முடிகிறது.

குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும் இவர் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு, தொடர்களிலும் நடித்து வருகிறார். அதே போன்று இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இவரது ஜாலியான காமெடி கேரக்டர் தான் இவரை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது. இதனாலேயே இவர் தற்போது ஒரு முக்கிய பிரபலமாக மாறி உள்ளார்.

 



இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன்னால் முடிந்த வரை சிறப்பாக விளையாடினார். மேலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தனது கணவர் மற்றும் சகோதரர்களுடன் கலந்து கொண்டு கலக்கி வருகிறார் நம்ம நிஷா. இவருக்கு விஜய் டிவியில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பல ரசிகர்கள் உண்டு. இவருக்கென்று தனி யூடியூப் பக்கமும் உள்ளது. அதில் அவ்வப்போது காமெடியான வீடியோக்களையும், தன் வாழ்க்கை பற்றிய வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.

also read : TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த கயல் சீரியல்.. ரோஜா சீரியலுக்கு இப்படியொரு நிலையா?



இவரது யூடியூப் சேனலின் பெயர் 'கருப்பு ரோஜா' என்பதாகும். இதற்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைப்பர்கள் இருக்கின்றனர். இவர் பகிரும் வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் வருவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் நிஷா தனது கிச்சன் டூர் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

also read : தமிழ் புத்தாண்டில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பிரபல சீரியல் நடிகர்!


அதில் தனது வீட்டு கிச்சனில் உள்ள கப்போர்டில் இருக்கின்ற பொருட்கள் ஒவ்வொன்றை பற்றியும் பார்வையாளர்களுக்கு எடுத்து கூறுகிறார். இந்த வீடியோவிலும் எப்போதும் போல காமெடி தூக்கலாகவே உள்ளது. அதே போன்று தனது அம்மா, தம்பி ஆகியோர் தனக்கு எந்த மாதிரியான பொருட்களை வாங்கி தந்துள்ளனர் என்பதை பற்றியும் நிஷா இந்த வீடியோவில் விளக்கி உள்ளார்.

மேலும் இவர் அமேசானில் வாங்கிய புது புது பொருட்களை எல்லாம் பார்வையாளர்களுக்கு காட்டி, அது குறித்து விளக்கினார். மளிகை பொருட்களை எந்தெந்த புராடக்ட்களில் வைக்க வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ள இந்த வீடியோ சிறப்பாக உதவும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Vijay tv

அடுத்த செய்தி