• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay TV Serial : விரைவில் வெற்றி விழா காணும் விஜய் டிவி சீரியல்: உற்சாகத்தில் ரசிகர்கள்

Vijay TV Serial : விரைவில் வெற்றி விழா காணும் விஜய் டிவி சீரியல்: உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் விரைவில் வெற்றி விழா கொண்டாட உள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஈரமான ரோஜாவே தொடரும் ஒன்று. இந்த பொழுதுபோக்கு சீரியல் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இப்போது வரை இந்த தொடருக்கான மவுஸ் குறைவில்லை என்றும் சொல்லலாம். இந்த தொடரில் மலராக பவித்ரா நடித்து வருகிறார். வெற்றி கதாபாத்திரத்தில் நடிகர் திரவியம் நடித்து வருகிறார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி போன்ற பலர் நடித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் பட்டியலில் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ஒரு இடம் உள்ளது. மேலும், இடையில் சீரியல் நிற்கப்போகிறது என நிறைய வதந்திகள் எல்லாம் பரவியது. சீரியலில் நடிகர்களின் மாற்றங்கள் கூட நடந்தது. இருப்பினும், ஈரமான ரோஜாவே சீரியல் இப்போது வரை மிகவும் வெற்றிகரமாக மக்களின் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக வெளிவந்துள்ள எபோசோடுகளால் கதைக்களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில் தான், ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை சீரியல் குழு கொடுத்துள்ள. அதாவது, ஈரமான ரோஜாவே சீரியலுக்காக விஜய் டிவி சூப்பர் நிகழ்ச்சியை வழங்க உள்ளது. அது சீரியலின் வெற்றிவிழா கொண்டாட்டம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது தொடர்பான நிகழ்ச்சிகளும் அண்மையில் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள், சீரியலின் வெற்றிவிழா கொண்டாட்டத்தை காண ஆவலுடன் உள்ளனர். 

ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பவித்தரா மற்றும் திரவியம் ஆகியோருக்கு எந்த எந்தளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு சாய் காயத்ரி மற்றும் சியாமிற்கு இருக்கின்றனர். சாய் காயத்ரி புவனேஷ் மதுரையை சேர்ந்தவர். சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். காலெஜ் படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார். தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார். இவரது முதல் சீரியல் காண காணும் காலங்கள் தான். இருப்பினும் பெரிதாக மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களின் காதல் காட்சிகளும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, கதைக்களத்தில் சில சோகமாக காட்சிகள் இடம்பெற்றுவருவதால், உண்மை கதையே இப்போது தான் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Photos : கால்கள் தெரியும்படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்-போட்டோஸ்

அடுத்து என்ன நேரும் என காத்திருக்கும் நிலையில், 3 வருடங்களாக சீரியல் ஒளிபரப்பட்டு வருவதையடுத்து, அதற்கு வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சீரியலின் அனைத்து ஆர்டிஸ்டுகளும் கலந்துகொண்டுள்ளனர். ஈரமான ரோஜாவே தொடரை பிரான்சிஸ் கதிரவன் முன்னர் இயக்கி வந்தார். அதன் பிறகு ரிஷி என்பவர் கதையை இயக்கி வருகிறார். மேலும் இத்தொடரின் ஒளிப்பதிவாளர் ரமேஷ் துரை ஆவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: