பி.எம்.டபிள்யூ கார் வாங்கிய விஜய் டிவி பாலாஜி!

பாலாஜி

பாலாஜி சொகுசு காரான பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார்.

 • Share this:
  விஜய் டிவி பிரபலம் பாலாஜி புதிதாக பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார்.

  குறுகிய காலத்திலேயே விஜய் டிவி நட்சத்திரங்கள் ரசிகர்களிடத்தில் வெகு விரைவிலேயே பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தாடி பாலாஜி விஜய் டிவி-யின் முக்கிய நட்சத்திரமாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் உட்பட, பல படங்களில் நடித்துள்ளார்.

  பின்னர் சின்னத்திரையில் நுழைந்த அவர், விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதோடு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.

  இதற்கிடையே விஜய் டிவி பிரபலங்கள் குக் வித் கோமாளி புகழ், சரத், ஈரோடு மகேஷ், ஜாக்லின் உள்ளிட்டோர் புதிதாக கார் வாங்கினர். இந்நிலையில் தற்போது பாலாஜி சொகுசு காரான பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார்.
  அதன் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், ‘காலம் கனிந்தது. கதவுகள் திறந்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பாலாஜிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: