Home /News /entertainment /

பிரபல இயக்குநரின் படத்தில் விஜய் டிவி டிடி - அவரே வெளியிட்ட புகைப்படம்!

பிரபல இயக்குநரின் படத்தில் விஜய் டிவி டிடி - அவரே வெளியிட்ட புகைப்படம்!

விஜய் டிவி டிடி

விஜய் டிவி டிடி

டிடி கமிட் ஆகியுள்ள லேட்டஸ்ட் பயணம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.

    டிடி என்று சுருக்கமாக ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் திவ்யதர்ஷினி. விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் டிடி என்கிற திவ்யதர்ஷினியும் ஒருவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவரைப் பற்றி பலருக்கு தெரியாத மற்றொரு தகவல் உண்டு. இவர் டிவி ஷோ-க்களில் அறிமுகம் ஆகும் முன்பாக திரைத்துறையில் நடித்துள்ளார். அதாவது, கடந்த 2003-ஆம் ஆண்டில் நடிகர் கமலஹாசனின் தயாரிப்பில் வெளியான ‘நள தமயந்தி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மயம், துருவ நட்சத்திரம் உள்ளிட்டவை டிடி நடித்துள்ள சில படங்கள் ஆகும்.

    இதற்கிடையே, ராதிகா சரத்குமாரின் ‘ராடன் மீடியா’ நிறுவனத்தின் தயாரிப்பில் ஒளிபரப்பான ‘செல்வி’ மற்றும் ‘அரசி’ போன்ற சீரியல்களில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் தொடர்ச்சியாக, விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழக்கி, மிகுந்த பிரபலம் அடைந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

    தற்போது, டிடி கமிட் ஆகியுள்ள லேட்டஸ்ட் பயணம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். அதாவது, ‘கலகலப்பு’ படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜெய் ஆகியோரை இணைந்து நடிக்க வைத்து, ரசிகர்களுக்கு பெரும் நகைச்சுவை விருந்து வைத்த இயக்குநர் சுந்தர் சி, தற்போது அதே நடிகர்களை கொண்டு புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளார். இந்தப் படத்தின் கதையம்சம் பாசமான குடும்பத்தையும், நகைச்சுவையையும் கொண்டதாக இருக்கும் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    நடிகர் ஜீவா மற்றும் ஜெய் ஆகியோருக்கு தங்கையாக டிடி நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஊட்டி, குடும்ப கதை, அண்ணன் மற்றும் தங்கை நடிப்பு. இதெல்லாம் சொன்னாலே யார் மாஸ்டர் (இயக்குநர்) என்பது உங்களுக்கு தெரிந்து விடும். ஆம், சுந்தர் சி அவர்களின் படத்தில் தான் இந்த ஹேண்ட்சம் ஹீரோக்களுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன். அதுகுறித்து மகிழ்ச்சி. விரைவில் குடும்ப எண்டர்டெய்ன்மெண்ட் படத்திற்காக காத்திருங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஜீவா, ஜெய் மற்றும் சுந்தர் சி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் டிடி பகிர்ந்துள்ளார்.

    எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்



    முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் ஸ்ருதி ஹாசனை விடாத கொரோனா

    சுந்தர் சி-யின் படத்தில் ஜீவா, ஜெய் மட்டுமல்லாமல் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அம்ரிதா ஐயர், ராய்ஸா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். டிடி-யை போலவே பிரபலமான மற்றொரு தொகுப்பாளினியான சம்யுக்தா சண்முகநாதனும் இந்தப் படத்தில் நடிக்க லேட்டஸ்டாக கமிட் ஆகியுள்ளர். படக்குழு தற்போது ஊட்டியில் மையம் கொண்டுள்ளது. இந்தப் படத்தை குஷ்பு சுந்தர் சி தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி