முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வீல் சேரில் விஜய் டிவி டிடி... கவலையில் ரசிகர்கள்

வீல் சேரில் விஜய் டிவி டிடி... கவலையில் ரசிகர்கள்

விஜய் டிவி டிடி

விஜய் டிவி டிடி

சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  • Last Updated :

விஜய் டிவி டிடி வீல் சேரில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் டிடி அந்த புகைப்படத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவி-யில் தனது ஆங்கரிங் கரியரை ஆரம்பித்த அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபமாக டிவி-யில் தோன்றாத டிடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார். இதற்கிடையே ஆர்ஆர்ஆர் பட புரொமோஷன் நிகழ்ச்சியை விஜய் டிவி-யில் தொகுத்து வழங்கினார்.

மேலும் படிக்க - திமுக அமைச்சர் குடும்பத்துக்கு மருமகளாகும் வலிமை விநியோகஸ்தர் மகள்!

Vijay TV DD Dhivya Dharshini in wheel chair, dd wheel chair Picture goes viral, Vijay TV DD, dd Dhivya Dharshini, dd instagram, vijay tv dd instagram, vijay tv dd hot, dd in bikini, விஜய் டிவி டிடி, டிடி திவ்ய தர்ஷினி, டிடி இன்ஸ்டாகிராம், டிடி இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள், vijay tv, dd shows, coffee with dd, vijay tv dd video, vijay tv dd husband, விஜய் டிவி டிடி வீடியோ, வீல் சேரில் டிடி

இந்நிலையில் டிடி வீல் சேரில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதனைப் பார்த்த ரசிகர்கள் டிடி-க்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பினர். ஃபோட்டோ குறித்து குறிப்பிட்டிருந்த டிடி, தனக்கு முடக்கு வாதம் இருப்பதால், நீண்ட தூரம் நடக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv