• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நீச்சல் உடையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் - லைக்ஸை குவிக்கும் டிடி-யின் வீடியோ!

நீச்சல் உடையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் - லைக்ஸை குவிக்கும் டிடி-யின் வீடியோ!

விஜய் டிவி டிடி

விஜய் டிவி டிடி

”நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட இந்த ரீலை போடலாமா வேணாமா என ரொம்ப யோசிச்சேன். மக்கள் என்ன சொல்வார்கள், என நினைப்பார்கள் என நினைத்தேன்.”

  • Share this:
    நீச்சல் உடையில் விஜய் டிவி டிடி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

    பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்யதர்ஷினி, தனது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்களால் டிடி என அன்போடு அழைக்கப்படுகிறார். சமீபத்தில் தனது விடுமுறையைக் கழிக்க மாலத்தீவுக்கு சென்ற அவர், அங்கு எடுக்கப்பட்ட வண்ணமயமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

    Sherin Shringar: இன்ஸ்டாகிராமில் படம் வெளியிட்டு மாப்பிள்ளை தேடும் பிக் பாஸ் ஷெரின்!




    தற்போது நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் ரிலை பகிர்ந்துள்ளார். அதில், ”நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட இந்த ரீலை போடலாமா வேணாமா என ரொம்ப யோசிச்சேன். மக்கள் என்ன சொல்வார்கள், என நினைப்பார்கள் என நினைத்தேன். ஆனால் நான் இங்கு வர 23 ஆண்டுகள் உழைத்ததை உணர்ந்தேன். இந்த வடிவத்தைப் பெற மணி கணக்கில் உழைத்தேன். எனவே இது என் மகிழ்ச்சிக்காக... எனக்குப் பிடித்ததை செய்கிறேன். (ஸ்விம்மிங் வராது அதனால் நடந்தேன்)” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    டிடி-யின் இந்த நீச்சலுடை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளையும், கருத்துகளையும் டிடி-யின் அந்த வீடியோவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: