மாலத்தீவில் விடுமுறையை கழிக்கும் விஜய் டிவி டிடி-யின் படங்கள் இன்ஸ்டாகிராமில் கவனம் பெற்று வருகின்றன.
திரைப்பிரபலங்களும், தொலைக்காட்சி பிரபலங்களும் தங்கள் விடுமுறையைக் கழிக்கும் ஹாட் ஸ்பாட்டாக மாலத்தீவு அமைந்துள்ளது. அங்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகும். அந்த வகையில் தற்போது விஜய் டிவி டிடி-யின் படங்களும் கவனம் பெற்றுள்ளன.

விஜய் டிவி டிடி
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி என்றழைக்கப்படும் டிடி மாலத்தீவில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். அங்கிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது வண்ணமயமான பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மூழ்கியவாறு, காலை உணவை சாப்பிட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார்.
டிடி நீச்சல் குளத்தில் இருக்கும் போது ஊழியர்கள் காலை உணவைக் கொண்டு வருகிறார்கள். அது சுவையானதா என்று அவர்களிடம் விசாரிக்கிறார் டிடி. இந்த வீடியோவும் படங்களும் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்