• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Cooku With Comali: விரைவில் குக் வித் கோமாளி சீசன் 3?

Cooku With Comali: விரைவில் குக் வித் கோமாளி சீசன் 3?

குக் வித் கோமாளி 3

குக் வித் கோமாளி 3

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனின் வெற்றியாளராக கனி அறிவிக்கப்பட்டார்.

  • Share this:
    விஜய் டிவி-யில் விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 ஒளிபரப்பாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமையல், காமெடி இரண்டையும் கலந்து செய்த கலவையான இது பலரையும் வாய் விட்டு சிரிக்க வைத்தது.

    முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனின் வெற்றியாளராக கனி அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து நவம்பர் மாதம், 3-ம் வாரத்தில் குக் வித் கோமாளி 3-ம் சீசன் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதில் யார் யார் கலந்துக்கொள்வார்கள், பழைய கோமாளிகள் யார் வருவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: