விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பம்சம் நிச்சயம் உண்டு. ஆரம்பத்தில் சாதாரண நிலையில் இருந்தவர்கள் கூட விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரிய ஆளாகி உள்ளனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரக்ஷன் தனது தொலைக்காட்சி பயணத்தை சாதாரண ஒரு நிகழ்ச்சி மூலம் தொடங்கினார். அதன் பிறகு படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து கொண்டு சினிமா வாய்ப்புகள் பெறும் அளவிற்கு வளர்த்துள்ளார்.
விஜய் டிவியில் தொகுப்பாளரான இவர், தற்போது அந்த சேனலின் டாப் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தான் இது வரை நடந்த 3 சீசன்களுக்கும் தொகுப்பாளராக இருந்துள்ளார் என்பது முக்கிய சிறப்பு. குக் வித் கோமாளி ஷோ என்றாலே ஒரே காமெடியாக தான் இருக்கும். இதில் கோமாளிகளால் ஏற்படும் கலாட்டா ஒரு பக்கம் என்றால் தொகுப்பாளரான ரக்ஷன் செய்யும் காமெடிகளும் சிறப்பாக இருக்கும். இது முழுக்க முழுக்க காமெடி ஷோ என்பதால் ரக்ஷனையும் சேர்த்தே பல கோமாளிகள் கலாய்த்து வருவார்கள்.
also read : Cooku with Comali Season 3ல் இணைந்த 3 புதிய கோமாளிகள் - யார் யார் தெரியுமா.?
அதே போல குக்களின் காமெடி மெட்டீரியலாகவும் அவ்வப்போது இவரை பயன்படுத்தி கொள்வார்கள். இவர் ஷோவில் இருப்பதே வேஸ்ட் என்கிற அளவுக்கு மணிமேகலை உள்ளிட்ட பலரும் ரக்ஷனை செமயாக கலாய்ப்பார்கள். இதை எல்லாத்தையும் காதில் போட்டு கொள்ளாமல் பதிலுக்கு ரக்ஷனும் மற்றவர்களை சிறப்பாக கலாய்த்து விடுவார். பொதுவாக இந்த நிகழ்ச்சியில் செய்யப்படும் எல்லாவற்றையும் காமெடியாகவே எடுத்துக்கொண்டு அவர் குக் வித் கோமாளியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்களும் உள்ளனர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் ரக்ஷனை பெரும்பாலும் பிடிக்கும்.
View this post on Instagram
also read : அஜித்தின் 2 புதிய படங்களிலும் நடிக்கும் பிக்பாஸ் கவின்?
இவருக்கென்று தனி இன்ஸ்டாகிராம் பக்கமும் உள்ளது. அதில் அவ்வப்போது தனது புகைப்படங்கள், இன்ஸ்ட்டா ரீலிஸ் போன்றவற்றை பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது அவர் பைக் ஸ்டண்ட் செய்யும் அசத்தலான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதுவும் பைக் ஹாண்டில் மீது உட்கார்ந்தபடியே அவர் பைக் ஓட்டி உள்ளார். இந்த வீடியோவில் அவர் மிகவும் கூலாக பைக்கை ஓட்டி உள்ளார். இதை பதிவிட்ட சில நிமிடங்களில் பலர் இது குறித்து தங்களின் கருத்துக்களை கமெண்ட் செய்துள்ளனர்.
குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து விட்டு ரக்ஷனா இது என்பது போன்ற சிறப்பான கமெண்டுகளை பதிவிட்டு உள்ளனர். மேலும் பலர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு ஆச்சர்யம் அடைந்து உள்ளனர். விஜய் டிவி பிரபலம் கவின் இந்த வீடியோவிற்கு "பயங்கரமான ஆளா இருக்கியே பா" என்று கமெண்ட் செய்துள்ளார். அதே போன்று குக் வித் கோமாளி மணிமேகலை "ஆள பாத்தா டம்மி பீசா இருக்க. ஆனா பயங்கரமான ஆளா இருக்கியேப்பா" என்று கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv