Cook With Comali: குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன்...

Cook With Comali: குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன்...

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டு நடைப்பெறுகிறது.

  • Share this:
விஜய் டிவி-யில் ஓளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’ மிகவும் பிரபலமானது. இதற்கென பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

'குக் வித் கோமாளி’ முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Pavani Reddy: சீரியல் நடிகை பவானி ரெட்டி லேட்டஸ்ட் படங்கள்!

இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா எலிமினேட் ஆன நிலையில் மற்ற 5 பேரும் போட்டியில் இருக்கிறார்கள்.



இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டு நடைப்பெறுகிறது. ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, அஸ்வின் ஆகிய 5 பேரில் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்த ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில் இறுதி இரு இடங்களை அஸ்வினும், பவித்ராவும் பிடிக்கிறார்கள். அதனால் அவர்கள் தங்கள் திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நேரம் வருகிறது. இருவரும் ப்ரக்கோலியை தேர்வு செய்கிறார்கள்.

கடைசியில் இருவருமே சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். ‘நீங்க 2 பேருமே எங்களுக்கு பெருமை சேக்குற மாதிரி பண்ணிருக்கீங்க, இந்த வாரம் சேஃப் ஸோனுக்கு போறது...’ என்கிறார் வெங்கடேஷ் பட். குக் வித் கோமாளியை விட்டு யார் வெளியேறுவார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: