’முதல் நிகழ்ச்சியின் போது அம்மாவை இழந்தேன்...’ குக் வித் கோமாளி பிரபலம் உருக்கம்

’முதல் நிகழ்ச்சியின் போது அம்மாவை இழந்தேன்...’ குக் வித் கோமாளி பிரபலம் உருக்கம்

குக் வித் கோமாளி 2

எனது முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட நாளில் எனது தாய் ஒரு ரயில் விபத்தில் இறந்தார்.

  • Share this:
தான் கடந்து வந்த கடினமான தருணங்களை சமீபத்திய நேர்க்காணலில் உருக்கமாக பகிர்ந்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் வெங்கடேஷ் பட்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி விரைவில் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் குக்குகள் மற்றும் கோமாளிகளுக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், ஜட்ஜ்கள் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தங்கள் துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பதோடு தனித்துவமான நகைச்சுவை உணர்வையும் கொண்டுள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சமீபத்திய எபிசோடில் எலிமினேட் ஆன பவித்ராவை ஆறுதல் படுத்த தான் கடந்த வந்த நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டார். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

’காரணமே சொல்லாமல் நிறுத்தி விட்டார்கள்’ – பொருமும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை

அப்போது பேசிய வெங்கடேஷ் பட், "நான்காம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் நான் ஃபெயில் ஆனேன். ஒன்பதாம் வகுப்பு தேர்வில் இரண்டாவது முறையும் நான் ஃபெயில் ஆனேன். எனது முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட நாளில் எனது தாய் ஒரு ரயில் விபத்தில் இறந்தார். என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தன. ஆனால் இவை அனைத்தையும் நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது தான் முக்கியம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது பிரபல ஹோட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியாக வெங்கடேஷ் பட் இருப்பது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: