குக் வித் கோமாளி எபிசோடை நீக்கிய ஹாட் ஸ்டார் - காரணம் என்ன?

குக் வித் கோமாளி எபிசோடை நீக்கிய ஹாட் ஸ்டார் - காரணம் என்ன?

குக் வித் கோமாளி டீம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடை ஹாட் ஸ்டார் தீடீரென நீக்கியுள்ளது.

  • Share this:
வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கை ரசிகர்கள் வைத்து வரும் நிலையில் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தகுதி பெற்றிருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் டைட்டிலைப் பெற்று வெற்றியாளராவார்.

இந்தநிலையில் இன்றும் நாளையும் செலிபிரிட்டி வாரம் கொண்டாடப்பட்டது. இதில் கனி தனது தங்கையை நிரஞ்சனாவையும், ஷகிலா தனது மகளையும் அஸ்வின் நடன இயக்குநர் சாண்டியையும் அழைத்து வந்தனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு முன்பே அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை ஹாட் ஸ்டார் தளத்தில் பயனாளர்கள் கண்டுகளிக்க முடியும். அந்த வகையில் இன்றைய எபிசோடை காலையில் தனது தளத்தில் பதிவேற்றியிருந்த ஹாட் ஸ்டார் திடீரென நீக்கியுள்ளது.

நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன எனக் கேட்டு ஹாட் ஸ்டாரை டேக் செய்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். தங்களது பயனாளர்களுக்கும், குக் வித் கோமாளி ரசிகர்களுக்கும் ஹாட் ஸ்டார் நிர்வாகம் பதிலளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published: