விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா லட்சுமி ஆகிய 8 பேர் குக்காகவும், புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளும் பங்கேற்றனர். இவர்களில் ஒரு சிலர் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் நிகழ்ச்சிக் குழுவினரும் வைல்ட் கார்ட் மூலமாக புதிய போட்டியாளர்களை களமிறக்கி வருகின்றனர். சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் விஜய் டிவியின் மற்றொரு ஷோவான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் அந்நிகழ்ச்சியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கவர்ச்சி நடிகை என்ற தனது இமேஜை உடைத்தெறிந்த நடிகை ஷகிலா அவரது வளர்ப்பு மகளான மில்லாவை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர் அஸ்வினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “அஸ்வின் என்னுடைய இன்னொரு தாய்க்கு பிறந்த சகோதரர்”என்று எமோஷனலாக எழுதியுள்ளார்.
மில்லாவின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷகிலாவை போட்டியாளர்கள் அம்மா என்றே அன்புடன் அழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.