Home /News /entertainment /

ப்ரோமோ வெளியான நிலையில் குக் வித் கோமாளி சீஸன் 3 திடீர் நிறுத்தம்?

ப்ரோமோ வெளியான நிலையில் குக் வித் கோமாளி சீஸன் 3 திடீர் நிறுத்தம்?

குக் வித் கோமாளி 3

குக் வித் கோமாளி 3

முன்னதாக, கடும் கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தின் போது ஷூட்டிங் செய்ய முடியாததால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதையும், குழுவினருக்கு அல்லது நடிகருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டதையும் நாம் பார்த்துளோம்.

மேலும் படிக்கவும் ...
    ஒருபக்கம் "இவங்கள பார்த்தாலே என் கவலையெல்லாம் பறந்து போயிடுங்க!", "வெயிட்டிங் வெயிட்டிங், "எங்களோட ஆல் டைம் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!" என்று மக்களெல்லாம் சொல்ல, மறுபக்கம் "இது குக் வித் கோமாளி முடிஞ்சா சிரிக்காம சமாளி!" என்று விஜய் டிவி கூற, சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி சீஸன் 3-யின் ப்ரோமோ வீடியோ எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக அரசல் புரசலாக சில வந்தந்திகள் கிளம்பிய வண்ணம் உள்ளன.

    முன்னதாக, கடும் கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தின் போது ஷூட்டிங் செய்ய முடியாததால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதையும், குழுவினருக்கு அல்லது நடிகருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டதையும் நாம் பார்த்துளோம். அதே போன்ற ஒரு காரணத்தினால் தான் குக் வித் கோமாளி சீஸன் 3-யும் நிறுத்தப்பட்டுள்ளதா? என்று நீங்கள் யோசித்து இருந்தால், நீங்களும் எங்களை போலவே தான் யோசிக்கிறீர்கள்! ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல.

    இன்னும் சொல்லப்போனால் குக் வித் கோமாளி சீஸன் 3 நிறுத்தப்பட்டுள்ளது என்கிற தகவலுக்கு எந்தவொரு அதிகாரபூர்வமான தகவலும் இல்லை, காரணமும் இல்லை. அதாவது பயங்கரமான எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ள சீஸன் 3 என்கிற தகவலை பரப்பினால் அது வேலைக்கு ஆகாது என்று நினைத்து, சீஸன் 3 நிறுத்தப்பட்டுள்ளது என்கிற தகவலை ஒரு கன்டென்ட் ஆக உருவாக்கி கிரியேட்டர்கள் அதை தாறுமாறாக பரப்பிய வண்ணம் உள்ளனர்.

    ஆக குக் வித் கோமாளி சீஸன் 3-ஐ மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கும் எவரும் இந்த தகவலை கண்டு ஷாக் ஆக வேண்டாம். ஏனெனில் முன்னரே குறிப்பிட்டபடி, இது முற்றிலும் அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் ஆகும்.

    ஏற்கனவே சீஸன் 3-யில் புகழ் இருக்க மாட்டார் என்பதால், பதிலுக்கு பதில் பங்கமாக கலாய்ப்பதிலும், ரியாக்ஷனை வைத்தே சிரிக்க வைப்பதிலும் எந்த அளவிற்கு பஞ்சம் இருக்குமோ என்று ரசிகர்கள் யோசிக்கும் நேரத்தில் குக் வித் கோமாளி சீஸன் 3 நிறுத்தம் என்கிற தகவலை நீங்கள் எங்காவது கேட்டோ, பார்த்தோ இருந்தால்.. ஃப்ரீயா விடுங்க பாஸ்!

    ஒருவேளை உண்மையிலேயே குக் வித் கோமாளி சீஸன் 3 நிறுத்தப்பட்டு இருந்தால், அது பற்றிய விவரங்களை குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் வெளியிட்டு இருப்பார்கள். குறிப்பாக மணிமேகலையும், சுனிதாவும் மற்றும் ஷிவாங்கியும்!.

    ஏனெனில் மேற்குறிப்பிட்ட மூவருமே தனித்தனியாக யூட்யூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். டீ போட்டு குடித்தது உட்பட எதையுமே கன்டென்ட் ஆக, யூட்யூப் சேனலுக்கான வீடியோவாக மாற்றும் திறன் கொண்ட இவர்கள், குக் வித் கோமாளி போன்ற மிக பிரபலாமான நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தால், நிச்சயம் அதை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். எனவே தான், இது முழுக்க முழுக்க கன்டென்ட் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்ட போலியான தகவலாக இருக்கலாம் என்று நாங்கள் அடித்து கூறுகிறோம்.



    இதெல்லாம் தவிர்த்து, உண்மையாகவே குக் வித் கோமாளி சீஸன் 3 நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தால் அல்லது ஒத்திவைக்கப்பட்டு இருந்தால் அது சார்ந்த அதிகாரபூர்வமான தகவல் கண்டிப்பாக வெளிவரும். அந்த பட்சத்தில் குறிப்பிட்ட காரணம் குறித்த கூடுதல் விவரங்களை உங்களுக்கு வழங்குகிறோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி