Home /News /entertainment /

மிகப் பெரிய எதிர்பார்ப்பு.. குக் வித் கோமாளி சீசன் 3-ல் யாரெல்லாம் வர்றாங்க தெரியுமா?

மிகப் பெரிய எதிர்பார்ப்பு.. குக் வித் கோமாளி சீசன் 3-ல் யாரெல்லாம் வர்றாங்க தெரியுமா?

குக் வித் கோமாளி 3

குக் வித் கோமாளி 3

புதிய கோமாளியாக குரேஷி, மூக்குத்தி முருகன், சூப்பர் சிங்கர் பரத் உள்ளிட்டோர் புதிதாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் எந்த அளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். நடன நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி என பல ஷோக்கள் மூலம் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வழங்க விஜய் டிவி என்றும் தவறியதில்லை.

    விஜய் டிவி-யில் எண்ணற்ற ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் அவற்றில் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற மெகாஹிட் ரியாலிட்டி ஷோக்களாக இரு நிகழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் மற்றும் சமையல் ஷோவை வித்தியாசமான பரிமாணத்தில் ஒளிபரப்பி ரசிகர்களின் மனதில் நிற்கும் குக் வித் கோமாளி. தற்போது மிகப்பெரிய பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

    இதனிடையே எந்த டிவி சேனல்களும் முயற்சிக்காத புத்தம் புதிய சமையல் ஷோவை காமெடி கலந்து கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்திய குக் வித் கோமாளியின் மூன்றாம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே ஒளிபரப்பான சீசன் மூலம் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா உள்ளிட்டோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தனர். முதல் சீசனை விட இரண்டாம் சீசன் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமானது.

    இதையும் படிங்க.. ஜப்பானில் வெளியாகும் தி கிரேட் இன்டியன் கிச்சன்...!

    இந்த ஷோவின் முதல் சீசன் 2019 நவம்பர் 16 முதல் 2020 பிப்ரவரி 23 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த சீசனை பிரபல ஆங்கர் ரக்ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க பிரபல சமையல் கலை நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர்கள்  நடுவர்களாக இருந்தனர். இதில் இறுதியாக வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.

    குக் வித் கோமாளி சீசன் 2 2020 நவம்பர் 14 முதல் 2021 ஏப்ரல் 14 வரை முதல் சீசனை போலவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பானது. இந்த சீசனை ரக்ஷன் தொகுத்து வழங்க செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோரே நடுவர்களாக இருந்தனர். இந்த சீசனில் பங்கேற்ற கனி வெற்றி பெற்றார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த ஷோவின் சீசன் 3 ஷூட்டிங் துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த சீசனில் யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில்,

    இதையும் படிங்க.. பொங்கலுக்கு வெளியாகும் பிரபுதேவா படம்...!

    * கிரேஸ் கருணாஸ்
    * நடிகர் சந்தோஷ் பிரதாப்
    * மனோபாலா
    * அந்தோணி தாசன்
    * வித்யுலேகா ராமன் உள்ளிட்டோர் போட்டியாளராக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் புதிய கோமாளியாக குரேஷி, மூக்குத்தி முருகன், சூப்பர் சிங்கர் பரத் உள்ளிட்டோர் புதிதாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, சுனிதா உள்ளிட்டோரும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. இரு சீசனின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர்களில் ஒருவரான புகழ் இந்த சீசனில் இல்லாதது சற்று ஏமாற்றத்தையே தந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி