• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குக்வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னராக காரக்குழம்பு கனி தேர்வு

குக்வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னராக காரக்குழம்பு கனி தேர்வு

குக்வித் கோமாளி கனி

குக்வித் கோமாளி கனி

குக்வித் கோமாளி சீசன் 2 வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். முதல் சீசனை விட இரண்டாவது சீசன் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே கூறலாம்.

இதில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். முதலில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்கள். பின்னர் நடந்த வைல்ட் கார்டு ரவுண்டில் ஷகிலாவும், பவித்ரா லட்சுமியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசனின் வின்னராக காரக்குழம்பு கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. பின்னர் பேசிய கனி, வீட்டை விட்டு அதிகம் வெளியில் வராத பெண் நான். எனக்கு இந்த டைட்டில் கிடைத்திருப்பது என்னைப் போன்று வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைத்திருப்பதாக நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

இந்த சீசனின் ஃபைனலில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இன்றுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுவதால் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லை. ஏராளமான ரசிகர்களால் ரசிக்கப்படும் குக் வித் கோமாளியின் 3-வது சீசன் விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: