குக் வித் கோமாளி புகழ் அவரது வருங்கால மனைவி எனக்கூறப்படும் பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.
நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. இந்த ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்திலும் அவர் கலந்துக் கொண்டார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். இதையடுத்து அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் புகழ்.
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து முன்பே ட்விட்டரில் குறிப்பிட்ட செல்வராகவன்?
இந்நிலையில்
விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 3-க்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில் புகழை தவிர மற்ற அனைத்து கோமாளிகளும் இடம் பெற்றிருந்தனர். இதனால் இந்த சீசனில் புகழ் கலந்துக் கொள்ள மாட்டாரா என சோகத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். அதோடு குக் வித் கோமாளியின் நடுவர்களில் ஒருவரான செஃப் தாமுவிடம் சமூக வலைதளத்திலும் கேட்டனர். அதற்கு, நிச்சயம் புகழ் வருவார் என பதிலளித்தார் தாமு.
இது கனவாக இருக்கக் கூடாதா? தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்
இதற்கிடையே ஒரு பெண்ணுடன் புகழ் நெருக்கமாக இருக்கும் படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அவர் புகழின் வருங்கால
மனைவி என தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.