6 மணி நேரத்தில் 25 லட்சம் சம்பாதித்த விஜய் டிவி புகழ்!

புகழ்

அருண் விஜய்யின் 'ஏவி 33', விஜய் சேதுபதியின் 'விஎஸ்பி 46', 'சபாபதி', குக் வித் கோமாளி அஸ்வினுடன் 'என்ன சொல்ல போகிறாய்' உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் புகழ்.

 • Share this:
  6 மணி நேரம் சிரிக்காமல் இருந்து 25 லட்சம் பரிசை வென்றிருக்கிறார் விஜய் டிவி புகழ்.

  நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. இந்த ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்திலும் அவர் கலந்துக் கொண்டார்.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். தற்போது அருண் விஜய்யின் 'ஏவி 33', விஜய் சேதுபதியின் 'விஎஸ்பி 46', 'சபாபதி', குக் வித் கோமாளி அஸ்வினுடன் 'என்ன சொல்ல போகிறாய்' உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

  தனது வேடிக்கையான காமெடி கவுண்டர்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளதோடு, சமூக ஊடகத்தில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்களையும் வைத்துள்ளார் புகழ். இந்நிலையில் மறைந்த காமெடி நடிகர் விவேக்குடன் இணைந்து மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கிய, 'LOL எங்க சிரிங்க பாப்போம்’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி அமேசான் ப்ரைமில் வெளியானது.

  இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஹாரத்தி, பிரேம்ஜி அமரன், அபிஷேக் குமார், பாகி, வி.ஜே.விக்னேஷ்காந்த், சதீஷ், மாயா மற்றும் புகழ் பங்கேற்றனர். இதில் பவர்ஸ்டார் முதல் போட்டியாளராக வெளியேறினார். அதே நேரத்தில் சதீஷ் கோட்டையைப் பிடித்து மற்ற ஆறு போட்டியாளர்களை வீட்டிற்கு அனுப்பினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முதலில் சதிஷ், 'LOL எங்க சிரிங்க பாப்போம்' டைட்டிலை வெல்ல தயாராக இருந்தபோது எல்லோ கார்டால் அந்த வாய்ப்பை இழந்தார். பின்னர் 'குக் வித் கோமாளி 2' புகழ் மற்றும் அபிஷேக் குமார் ஆகியோர் அந்த பட்டத்தை வென்றனர். இவர்கள் இருவரும் ஆறு மணி நேரம் சிரிக்காமல் விளையாடி 25 லட்சம் பரிசுத் தொகையை வென்றது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: