பட வாய்ப்பால் விஜய் டிவி-க்கு தற்காலிகமாக பை சொல்லியிருந்த புகழ் சிறிது இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஹாய் சொல்லியிருக்கிறார்.
நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. இந்த ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்திலும் அவர் கலந்துக் கொண்டார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். இதையடுத்து அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் புகழ்.
இதற்கிடையே விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 3-க்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில் புகழை தவிர மற்ற அனைத்து கோமாளிகளும் இடம் பெற்றிருந்தனர். இதனால் இந்த சீசனில் புகழ் கலந்துக் கொள்ள மாட்டாரா என சோகத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். அதோடு குக் வித் கோமாளியின் நடுவர்களில் ஒருவரான செஃப் தாமுவிடம் சமூக வலைதளத்திலும் கேட்டனர். அதற்கு, நிச்சயம் புகழ் வருவார் என பதிலளித்தார் தாமு. படங்களில் பிஸியாக இருப்பதால் தான் அவரால் ப்ரோமோ ஷூட்டுக்கு வர முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால்,
புகழ் மீண்டும்
விஜய் டிவி பக்கம் கரை ஒதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை யாரும் எதிர்பார்க்காத புதிய நிகழ்ச்சியில் களம் இறங்கவிருக்கிறாராம் புகழ். அதாவது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் மட்டும் தான் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புகழும் இதில் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ
அறிவிப்பு ப்ரோமோவுடன் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட புகழ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.