Cook With Comali: ’பலூன் சாக்லேட்’ போட்டியாளர்களை தெறிக்க விடும் ‘குக் வித் கோமாளி’ டாஸ்க்!

Cook With Comali: ’பலூன் சாக்லேட்’  போட்டியாளர்களை தெறிக்க விடும் ‘குக் வித் கோமாளி’ டாஸ்க்!

குக் வித் கோமாளி

இந்த வார ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி செமி ஃபைனல்ஸ் எபிசோடாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    ரியாலிட்டி ஷோ-க்களில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி மாறியிருக்கிறது. இதன் முதல் சீசனின், டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

    Director Cheran: பிறந்தநாள் வாழ்த்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு பதிலளித்த சேரன்!



    இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகிய நால்வரும் எலிமினேட் ஆகியிருக்கிறார்கள். வைல்ட் கார்டு எண்ட்ரியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரித்திகா, 3-வது எபிசோடில் எலிமினேட் ஆனார்.

    இந்நிலையில் இந்த வார ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி செமி ஃபைனல்ஸ் எபிசோடாக ஒளிபரப்பாகவிருக்கிறது. அதில் சுவாரஸ்யமான ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சாக்லேட்டை உருக்கி, பலூனை ஊதி அதை சாக்லேட்டில் ’டிப்’ செய்து ஃப்ரிட்ஜில் வைத்து, பலூன் சாக்லேட் செய்ய வேண்டும். பலூனை ஊதும் போதும், சாக்லேட்டில் நனைக்கும் போதும் பட் பட்டென உடைகிறது. இந்த சோதனையை எல்லாம் கடந்து யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: