விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியின் முதல் சீசனின் டைட்டிலை ’பிக் பாஸ்’ வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
Ajith: துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் – ட்ரெண்டாகும் படங்கள்!
இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா லட்சுமி ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.
KPY Naveen: வெளியுலகிற்கு தன் மகனை அறிமுகப்படுத்திய ‘பாவம் கணேசன்’ நவீன்!
இந்நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிபிரேஷன் ரவுண்ட் நடந்தது. இதில் முதல் சீசன் போட்டியாளர்களான ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ், ரம்யா பாண்டியன் ஆகிய நால்வரும் கலந்துக் கொண்டனர். ஆனால் அதில் குக் வித் கோமாளி இரண்டாம் சீசன் போட்டியாளர் பவித்ரா லட்சுமி கலந்துக் கொள்ளவில்லை.
Vijay TV DD: மாலத்தீவில் விஜய் டிவி டிடி – கவனம் பெறும் நீச்சல் குள படங்கள்!
இந்நிலையில் இந்த வார குக் வித் கோமாளி ப்ரோமாவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதிலும் பவித்ராவை காணவில்லை. அதனால் பவித்ரா எங்கே எனக் கேள்வி எழுப்பினார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில், "சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு வாரங்களாக கலந்துக் கொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் நிச்சயம் வந்துவிடுவேன். உங்களை ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துகிறேன். என் மேல் நீங்கள் காட்டும் அன்பு, எனக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி" என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்