Cook With Comali: புகழ் மேல யாருக்கு தான் க்ரஷ் வராது...? குக் வித் கோமாளி பவித்ரா!

Cook With Comali: புகழ் மேல யாருக்கு தான் க்ரஷ் வராது...? குக் வித் கோமாளி பவித்ரா!

பவித்ரா லட்சுமி - புகழ்

'அஸ்வின் எலிமினேஷன்ல இருந்து காப்பாத்தப்பட்டபோது, சிவாங்கி அவரோட கைய பிடிச்சு எமோஷனல் ஆனது ரொம்ப க்யூட்டா இருந்தது’

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் பவித்ரா லட்சுமி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்த அவர், ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    பாலாவை பற்றிய கேள்விக்கு, ‘அந்த செட்டில் குறைத்து எடைப்போடப்படுபவர் பாலா. அவருக்கு இருக்க மாதிரி ‘கவுண்டர்’ டேலண்ட் வேற யாருக்குமே இல்ல. டக்குன்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு ‘கவுண்டர்’ தருவாரு. பாலாவால தான் நான் எலிமினேட் ஆன மாதிரி சில மீம்ஸ் எல்லாம் பாத்தேன். ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க. பாலா யாருக்கு கோமாளியா போனாலும், அவரோட அதிகபட்ச முயற்சியைக் கொடுப்பாரு’ என்றார்.

    புல்லட்டில் ஹாயாக வலம் வரும் விஜய் டிவி அம்மா நடிகை – வீடியோ

    அடுத்ததாக சிவாங்கி - அஸ்வின் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அவங்க ரெண்டு பேருமே பயங்கர க்யூட். அவங்க ரெண்டு பேரும் பண்ற குட்டி குட்டி சேட்டைகளை நான் ஹாட்ஸ்டார்ல பாத்து ரசிப்பேன். அஸ்வின் எலிமினேஷன்ல இருந்து காப்பாத்தப்பட்டபோது, சிவாங்கி அவரோட கைய பிடிச்சு எமோஷனல் ஆனது ரொம்ப க்யூட்டா இருந்தது’ எனத் தெரிவித்தார்.

    இதையடுத்து உங்களுக்கு புகழ் மீது க்ரஷ் இருக்கிறதா என பவித்ராவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘புகழ் மேல யாருக்கு தான் க்ரஷ் இல்ல? அவர் மாதிரி சிரிக்க வச்சுட்டே இருக்க ஒரு ஆள் மேல யாருக்கு தான் க்ரஷ் வராது?’ என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: