உணவு ஒவ்வாமையால் குக் வித் கோமாளி ரித்திகா மருத்துவமனையில் அனுமதி

உணவு ஒவ்வாமையால் குக் வித் கோமாளி ரித்திகா மருத்துவமனையில் அனுமதி

ரித்திகா

சீரியல் நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமுமான ரித்திகா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறக்கப்பட்டவர் ரித்திகா. ஏற்கெனவே பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த 3 வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ரித்திகா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது, “இன்ஸ்டாகிராம் நண்பர்களே. கவலைப்பட வேண்டாம். குறைந்த ரத்த அழுத்தம் & உணவு ஒவ்வாமை தான். இன்னும் நான் உடல்நலக்குறைவாக இருப்பதால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் தேறிவருவதாக எண்ணுகிறேன். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. அனைவரும் உடல்நலனில் அக்கறையோடு இருங்கள்” என்று கூறியுள்ளார்.ரித்திகாவின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்த குக் வித் கோமாளி ரசிகர்கள் அவர் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: