விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி படைத்த புதிய சாதனை

குக் வித் கோமாளி ஷிவாங்கி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி புதிய சாதனையை படைத்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர்.

முதல் சீசனில் கோமாளிகளாக இருந்தவர்கள் இந்த முறையும் இடம்பெற்றிருப்பதால் காமெடிக்கு பஞ்சமில்லை. இந்நிகழ்ச்சியில் ஷிவாங்கி, புகழ் இடையேயான அண்ணன்- தங்கை பாசம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் அஸ்வின் - ஷிவாங்கி இடையேயான குறும்புத்தனங்களும் ரசிக்கத்தக்க வகையில் இருப்பதையும் ரசிகர்களின் சோஷியல் மீடியா பதிவுகளின் மூலம் அறிய முடிகிறது. மேலும் சமையல் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறலாம்.

இந்நிகழ்ச்சியில் தனது தனித்திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த ஷிவாங்கி அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கிய ஷிவாங்கி 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றார். இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களில் 1 மில்லியன் பேர் ஷிவாங்கியை பின் தொடர ஆரம்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. 
View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)


இதேபோல் குக் வித் கோமாளி அஸ்வினின் இன்ஸ்டாகிராம் கணக்கை 1.3 மில்லியனுக்கும் அதிகமானோரும், புகழை 1.2 மில்லியன் பேரும் பின் தொடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: