விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கும் புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண் விஜய், சந்தானம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சீரியல் நடிகை தர்ஷா குப்தா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார்.
‘முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’, உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதை தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் தர்ஷா குப்தா.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, “எனக்காக வெளியூரில் இருந்தெல்லாம் வந்திருக்கிறீர்கள். என் மீது நீங்கள் எந்த அளவு அன்பு வைத்திருக்கிறீர்களோ அப்படி நானும் உங்கள் மீது அளவு கடந்த லவ் வைத்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தவே இந்த மீட்டிங்.
இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் வந்திருக்கிறார்கள். மற்ற பிரபலங்கள் இப்படியான தருணத்தை குடும்பத்துடன், நண்பர்களுடன் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் நான் சீரியலில் நடித்தது முதல் திரைப்பட வாய்ப்புகள் உள்ளிட்ட எனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். ஜீரோவாக இருந்த என்னை கோபுரத்தில் அமர வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இல்லையென்றால் நான் ஜீரோ தான். எனவே இந்த தருணத்தை என் நண்பர்கள், குடும்பத்தினருடன் கொண்டாடுவதை விட உங்களுடன் கொண்டாடுகிறேன். நீங்கள் இல்லையென்றால் நான் இந்த இடத்துக்கு வந்திருக்கவே முடியாது” இவ்வாறு நடிகை தர்ஷா குப்தா கூறியுள்ளார்.
முன்னதாக குக் வித்ப் கோமாளி புகழும் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றதற்காக தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.