குக் வித் கோமாளி அஸ்வின் கைதா?

அஸ்வின் குமார்

’என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அஸ்வின்.

 • Share this:
  குக் வித் கோமாளி அஸ்வின் கைது செய்யப்பட்டதாக ஒரு மீம் இணையத்தில் ட்ரெண்டானது.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாகி வந்த இதில், கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில் போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு குக்குக்கும், கோமாளிக்கும் பெரிய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. இதில் வின்னராக கனியும், ரன்னர்களாக ஷகிலா மற்றும் அஸ்வினும் இடம் பெற்றனர். நிகழ்ச்சியில் அஸ்வின் - சிவாங்கி ஜோடிக்கு ரசிகர்கள் அதிகம். தற்போது இவர்கள் படங்களிலும் நடித்து வருகிறார்கள்.
  குறிப்பாக புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் ’என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அஸ்வின். இதில் குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார். இந்தப் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  குக் வித் கோமாளி அஸ்வின் கைதா?
  அஸ்வின் மீம்


  இந்நிலையில் பிரேக்கிங் நியூஸ்... பல பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என்று ஜாலியாக வெளியான போஸ்டரை பார்த்த அஸ்வினுக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று விட்டதாம். இதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார் அஸ்வின்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: