முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குக் வித் கோமாளி 3 எப்போது தொடங்குகிறது தெரியுமா?

குக் வித் கோமாளி 3 எப்போது தொடங்குகிறது தெரியுமா?

குக் வித் கோமாளி 3

குக் வித் கோமாளி 3

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக காரக்குழம்பு கனி இடம்பெற்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சி குறித்த அட்டகாச தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி, விஜய் டிவி-யில் அதிக டி.ஆர்.பி மதிப்பீட்டை பதிவு செய்யும் நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-யை கூட சில சமயங்களில் மிஞ்சும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம்பெறும் குக்குகளும், கோமாளிகளும் ரசிகர்களிடையே பெரும் புகழை பெற்றிருக்கிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பு வெளியில் தெரியாமல் இருந்தவர்களும் அதன் பிறகு படு பிரபலமாகியிருக்கிறார்கள்.

இறுதியாக முடிந்த இதன் 2-வது சீசனில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறக்கப்பட்டவர் ரித்திகா.

இதையடுத்து குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக காரக்குழம்பு கனி இடம்பெற்றார். அஸ்வினும், ஷகிலாவும் அதற்கடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். இந்நிலையில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது இதற்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv