Cook With Comali: ’குக் வித் கோமாளி’ கனிக்கு இவ்வளவு பெரிய மகள்களா?

கனி திரு

டாஸ்க் அனைத்தையும் சிறப்பாக செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கனி.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    தற்போது இது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. குக் வித் கோமாளி கடந்த சீசனில், பிக் பாஸ் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். அதில் ரம்யா பாண்டியன் இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

    Raaja Paarvai: விஜய் டிவி சீரியலுக்காக சன் டிவி-க்கு ’பை பை’ சொன்ன நடிகர்!

    இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா, பவித்ரா ஆகிய 4 பேர் எலிமினேட் ஆன நிலையில் மற்ற 4 பேரும் போட்டியில் இருக்கிறார்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Kani Thiru (@kanithiru10)






    இதில் டாஸ்க் அனைத்தையும் சிறப்பாக செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கனி. இவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள், இயக்குநர் திருவின் மனைவி. நடிகைகள் விஜய லட்சுமி மற்றும் நிரஞ்சனியின் மூத்த சகோதரி.

    தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த கனி, தற்போது தனது யூ-ட்யூப் சேனலில் ‘பொன்னியின் செல்வன்’ கதையை எளிமையான முறையில் சொல்லும் கதை சொல்லியாகவும் மாறியிருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் கனி. இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா என ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: