• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "உன்ன குப்ப தொட்டில இருந்து தூக்கிட்டு வந்துட்டாங்களாம்" - காரக்குழம்பு கனி வெளியிட்ட கியூட் ரீல்ஸ்!

"உன்ன குப்ப தொட்டில இருந்து தூக்கிட்டு வந்துட்டாங்களாம்" - காரக்குழம்பு கனி வெளியிட்ட கியூட் ரீல்ஸ்!

கனி திரு - நிரஞ்சனி

கனி திரு - நிரஞ்சனி

தனது இரண்டாவது தங்கை நிரஞ்சனி அகத்தியனுடன் இணைந்து வெளியிட்ட இன்ஸ்டா ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    காரக்குழம்பு கனி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் கனி, குக்கு வித் கோமாளி சீசன்- 2வின் டைட்டில் வின்னர். இவர் சமையல் மட்டுமல்ல, தனது பேச்சாலும் பிறருடன் பழகும் விதத்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர்.

    குக்கு வித் கோமாளி சீசன்-2 முடிந்த பிறகு, தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது தங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

    இவர், தற்போது தனது தங்கையுடன் இணைந்து ஒரு கியூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சிறுவயது பிள்ளைகள் போல பேசுவோரின் வசனத்திற்கு டப்பிங் செய்து அசத்தியுள்ளனர். "நீயும் நானும் அக்கா, தங்கை தானே ஆனால் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம் என்று கனியிடன் நிரஞ்சனி கேட்க. நான் சின்ன வயசுல தங்கச்சி பாப்பா வேணும் அழுதுகிட்டே இருப்பேனா. அதனால உன்ன குப்பைதொட்டிலிருந்து தூக்கிட்டு வந்துட்டாங்களாம்" என்று கனி பதிலளிக்கிறார்.

    தனது இரண்டாவது தங்கை நிரஞ்சனி அகத்தியனுடன் இணைந்து வெளியிட்ட இன்ஸ்டா ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோ பதிவில் " இந்த உண்மைய உங்களுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு" என்று நகைச்சுவையாக கேப்ஷன் செய்துள்ளார் கனி.

    அந்த கியூட் வீடியோவை நீங்களும் பாருங்க



     




    View this post on Instagram





     

    A post shared by Kani Thiru (@kanithiru10)






    கனி பிரபல இயக்குனர் அகத்தியனின் முதல் மகள் ஆவார். இவரது இயர் பெயர் கார்த்திகா ஆகும். இவரின் இரு தங்கைகள் விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனி. விஜயலட்சுமி சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல நிரஞ்சனியும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் கனி இயக்குனர் திரு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    திரு, தீராத விளையாட்டுபிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இருவருக்கும் இப்போது இரு மகள்கள் உள்ளனர். இவரது குடும்பமே சினிமா பின்புலம் கொண்ட குடும்பம் ஆகும். தற்போது ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் கனி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல் விளையாட்டு ‘ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார்.

    அப்போது, இந்த கேம் ஷோ-வுக்கு ரசிகர்கள் ஏராளம். கனிக்கும் அப்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஆனால் அந்த ஷோ-வுக்கு பிறகு கனி திரையில் தோன்றவில்லை. பின்னர், ஹிட் ஷோவான குக்கு வித் கோமாளியில் கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்கள் ஷேர் செய்து வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: