முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குக் வித் கோமாளி 4: இந்த வாரம் வெளியேறப்போகும் குக் இவரா?

குக் வித் கோமாளி 4: இந்த வாரம் வெளியேறப்போகும் குக் இவரா?

குக் வித் கோமாளி சீசன் 4

குக் வித் கோமாளி சீசன் 4

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களுக்கு ரசிகர்களிடையே கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு வெற்றிகரமாக 4வது சீசன் ஒளிபரப்பாகிவருகிறது. கோமாளிகளைப் பொறுத்தவரை கடந்த சீசன்களிலிருந்து புகழ், மணிமேகலை, குரேஷி, சுனிதா ஆகியோருடன் புதிதாக ஜிபி முத்து, மோனிஷா, சிங்கப்பூர் தீபன், ரவீனா, ஓட்டேரி சிவா உள்ளிட்டோர் களமிறங்கினர்.

கடந்த 3 சீசன்களில் கோமாளியாக கலக்கிய சிவாங்கி இந்த சீசனில் குக்காக களமிறங்கி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் ராஜ் ஐயப்பன், நடிகை விசித்திரா, நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர், நடிகை சிருஷ்டி டாங்கே, ஜிகர்தண்டா புகழ் காளையன், நடிகை ஷெரின், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் விஷால், மைம் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் கிஷோர் முதல் ஆளாக எலிமினேட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் இந்த வாரம் பிப்ரவரி 25 -26 வாரம் எலிமினேஷன் வீக் என்பதால் இந்த வாரம் வெளியேறப் போகும் குக் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான புதிய புரமோவில் விஜே விஷால் மற்றும் மைம் கோபி ஆகியோர் ஃபேஷ் ஆஃப் குக்கிங்கிற்கு செல்வதாக காட்டப்படுகிறது.. இதனையடுத்து இருவரில் இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

First published:

Tags: Vijay tv