• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay Tv Cook With Comali: விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் முதல் படம் குறித்த தகவல்

Vijay Tv Cook With Comali: விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் முதல் படம் குறித்த தகவல்

குக் வித் கோமாளி பவித்ரா

குக் வித் கோமாளி பவித்ரா

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் முதல் படம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா லட்சுமி ஆகிய 8 பேர் குக்காகவும், புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளும் பங்கேற்றனர். இவர்களில் ஒரு சிலர் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

பிக்பாஸைப் போல் இந்நிகழ்ச்சியும் ஹிட் அடித்திருக்கும் நிலையில் இதில் பங்குபெறுவோருக்கும் வெள்ளித்திரை வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் புகழ் அருண் விஜய் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தர்ஷா குப்தா ‘ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது அந்தப் பட்டியலில் குக் வித் கோமாளி பவித்ராவும் இணைந்துள்ளார்.

இளம் மலையாள நடிகர் ஷேன் நிகமுக்கு ஜோடியாக ‘உல்லாசம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே இதுவரை சின்னத்திரையில் பார்த்த பவித்ரா லட்சுமியை வெள்ளித்திரையில் காண உள்ளனர் அவரது ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: